வரும்
2021ல் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ஒப்புதல் அளித்துள்ள மத்திய
அமைச்சரவை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டை (என்.பி.ஆர்.,) புதுப்பிக்கவும்
ஒப்புதல் அளித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு 2021ல் நடக்க உள்ளது.
என்பிஆர் புதுப்பிக்கும் பணி, 2020 ஏப்ரல் முதல் செப்டம்பரில், அசாம்
தவிர்த்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற
உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த ரூ.8,754 கோடியும், என்பிஆர்
புதுப்பிக்க ரூ.3,941 கோடியும் ஒதுக்கியுள்ளது.என்பிஆரின் விளக்கம்நாட்டு
குடிமக்கள், தங்களை பற்றிய விவரங்களை பதிவு செய்து கொள்வதே என்பிஆர் ஆகும்.
குடிமக்கள் அனைவரும் என்பிஆரில் பதிவு செய்து கொள்வது அவசியம்.
இது, இங்கு
வசிக்கும், இந்திய மற்றும் வெளிநாட்டு குடிமகன்களுக்கும் பொருந்தும்.
ஒவ்வொரு குடிமக்களின் விரிவான, அடையாள தகவல்களை சேகரிப்பதே என்பிஆரின்
முக்கிய நோக்கமாகும். கடந்த 2010 ல் தான் முதலாவது என்பிஆர்
உருவாக்கப்பட்டது. பின்னர், 2015ல் வீடு வீடாக சென்று, இந்த என்பிஆர்
புதுப்பிக்கப்பட்டது. இந்நிலையில், மீண்டும் என்பிஆர் புதுப்பித்தல் பணி,
வரும் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை நடக்க உள்ளது. 1955 ம் ஆண்டு குடிமக்கள்
சட்டம் மற்றும் 2003 ம் ஆண்டு குடியுரிமை( குடிமக்கள் பதிவு மற்றும் தேசிய
அடையாள அட்டை வழங்குதல்) விதிகள் சட்டத்தின்படி, உள்ளூர்(கிராமம்/ துணை
நகரம்), துணை மாவட்டம், மாவட்டம், மாநிலம் மற்றும் தேசிய வாரியாக என்பிஆர்
புதுப்பித்தல் பணி நடக்க உள்ளது. 2003 ம் ஆண்டு குடியுரிமை( குடிமக்கள்
பதிவு மற்றும் தேசிய அடையாள அட்டை வழங்குதல்) விதிகள் சட்டத்தின் கீழ்,
வழக்கமான குடியிருப்பு வாசிகள் என்பது, ஒரே பகுதியில் தொடர்ந்து 6
மாதங்களாக குடியிருப்பவர் அல்லது அடுத்த 6 மாதம் அதே பகுதியில் குடியிருக்க
விரும்புபவர் என்பதை குறிக்கிறது.மக்கள் தொகை கணக்கெடுப்புநாட்டில் உள்ள
மக்கள் தொகையை கணக்கிடுவது தான் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். இது
ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும், ஒரு முறை நடத்தப்படுகிறது. முதலாவது மக்கள்
தொகை கணக்கெடுப்பு ,1872 ல் நடத்தப்பட்ட நிலையில், 16வது கணக்கெடுப்பு
2021ல் நடக்க உள்ளது. அதேநேரத்தில், நாடு சுதந்திரம் பெற்ற பின்பு 8 வது
முறையாக நடத்தப்படுகிறது. 2021ல் நடக்கும் மக்கள் தொகை கணக்கெடுக்கும்
பணியில், முதல்முறையாக, தகவல்களை சேகரிக்க மொபைல்போன் ஆப்
பயன்படுத்தப்படுகிறது. சுய கணக்கீட்டிற்கான ஒரு வசதியையும் பொது மக்களுக்கு
வழங்கப்பட உள்ளது.
என்பிஆருக்கு தேவைப்படும் தகவல்என்பிஆர் புதுப்பிக்கும் பணியில், ஒவ்வொரு குடிமகனிடமும், 21 தகவல்கள் சேகரிக்கப் படுகின்றன. அதில், ஒருவரின் பெற்றோரின் பிறந்த இடம், அவர்கள் தேதி, கடைசியாக வசித்த இடம், பான் கார்டு எண், ஆதார் எண்,வாக்காளர் அடையாள அட்டை எண்,டிரைவிங் லைசென்ஸ் எண் மற்றும் மொபைல் எண் உள்ளிட்ட 21 தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
கடந்த 2010ம் ஆண்டில், என்பிஆர் புதுப்பித்தல் பணியில், 15 தகவல்கள் சேகரிக்கப்பட்டன. அப்போது பெற்றோர் பிறந்த இடம் மற்றும் தேதி, கடைசியாக வசித்த இடம் ஆகியவை கேட்கப்படவில்லை. என்பிஆர் மற்றும் என்ஆர்சி இடையிலான வித்தியாசம்என்பிஆர் ஆனது, தேசிய குடிமக்கள் பதிவேடுவில் (என்ஆர்சி)இருந்து வேறுபடுகிறது. என்ஆர்சியில், வெளிநாட்டினர் இடம்பெற மாட்டார்கள்.
2003ம் ஆண்டு டிச.,10ல் வெளியிடப்பட்ட குடியுரிமை சட்டப்படி, மக்கள் தொகை பதிவேடு என்பது, கிராமம் அல்லது கிராமப்புற பகுதி அல்லது நகரம் அல்லது வார்டு அல்லது நகரம் அல்லது கிராமப்புறத்தில் உள்ள வார்டுக்குள் உள்ள எல்லை நிர்ணயிக்கப்பட்ட பகுதி( குடிமக்கள் பதிவு பதிவாளர் வரையறைத்தபடி)களில் உள்ளவர்களின் தகவல்கள் இடம்பெற்றிருக்கும். அதேநேரத்தில், இந்திய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) என்பது, உள்நாடு மற்றும் வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்கள் பற்றிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும். இந்த விதிகளின்படி என்ஆர்சியில், ஒவ்வொரு குடிமகனின் தந்தை பெயர், தாயார் பெயர், பாலினம், பிறந்த தேதி, பிறந்த இடம், குடியிருப்பு முகவரி(தற்போதைய மற்றும் நிரந்தர) திருமண நிலை, திருமணம் ஆகியிருந்தால், கணவன் அல்லது மனைவி பெயர், அங்கஅடையாளம், குடிமக்களாக பதிவு செய்யப்பட்ட தேதி, பதிவு எண் மற்றும் தேசிய அடையாள எண் ஆகிய தகவல்கள் கண்டிப்பாக இடம்பெற்றிருக்கும்.என்பிஆர் மற்றும் என்ஆர்சி இடையிலான தொடர்பு2003, டிச.,10ல், மத்திய அரசு வெளியிடப்பட்ட குடியுரிமை விதிகளின்படி, உள்ளூர் பதிவாளர் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் குடியிருக்கும் மக்கள், தங்களை பற்றிய தகவல்களை வைத்து மக்கள்தொகை பதிவேட்டை உருவாக்கலாம்.
இதற்கான குறிப்பிட்ட தேதியை மத்திய அரசு முடிவு செய்யலாம். இதன்மூலம், பின்னாளில் அவர்களை பற்றிய விவரங்களை, மக்கள் தொகை பதிவேட்டிலிருந்து சரிபார்க்க முடியும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...