கல்வியின் தரத்தை மேம்படுத்த ஆலோசனைகள் வழங்க பள்ளிக்கல்வித்துறையின் ஆணையர் சிஜி தாமஸ் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
பள்ளிக்கல்வித்துறையின் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ள சிஜி தாமஸ் வைத்யன் வரும் 9-ம் தேதி முதல் 19 தேதி வரை 9 மண்டலங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அந்த பயணத்தில் கல்வியின் தரத்தினை மேம்படுத்திட ஆசிரியர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு ஆலோசனைகள் வழங்க உள்ளார்.கோவை, சேலம், மதுரை உள்ளிட்ட 9 மண்டலங்களில் உள்ள 32 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் துவக்க பள்ளிகள், நடுநிலை, உயர் நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளிகளைச் சேர்ந்த 20 தலைமை ஆசிரியர்கள், 20 ஆசிரியர்கள் வீதம் மாவட்ட கல்வி நிர்வாகம் தேர்ந்தெடுத்து இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
வரும் 9-ம் தேதி கோவையில் தனது துவங்கி 19-ம் தேதி திருவண்ணாமலையில் தனது பயணத்தை நிறைவு செய்ய உள்ளார். இந்த நிலையில் இம்மாதம் 11 மற்றும் 23-ம் தேதி வரையில் அரையாண்டு தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேதிகளில் ஆசிரியர்கள் ,கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆணையரின் சுற்றுப்பயணம் நடைபெறுகின்றது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...