Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரையாண்டு விடுமுறையில்  சிறப்பு வகுப்புகள் நடத்தினால் பள்ளிகள் மீது நடவடிக்கை தொடக்க கல்வித் துறைஎச்சரிக்கை

அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு கள் நடத்தக்கூடாது என தொடக்கக் கல்வித் துறை எச்சரிக்கை விடுத் துள்ளது.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர்களுக்கும் தொடக்கக் கல்வித் துறை இயக்குநர் பழனிசாமி அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளி களுக்குடிச.24 முதல் ஜன.3-ம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாட்கள், மாணவர்கள் தங்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஏதுவாகவும், அவர்கள் புத்துணர்ச்சி பெறும் வகையிலும் அமைய வேண்டும்.ஆனால், சில பள்ளிகளில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக இயக்குநரின் கவனத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. எனவே, அரையாண்டு விடுமுறை நாட் களில் எக்காரணம் கொண்டும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு களை நடத்தக்கூடாது. சிறப்பு வகுப்புகள் நடப்பது கண்டறியப் பட்டால் அந்தப் பள்ளிகள் மீது கடும்நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




1 Comments:

  1. Thanjavur district conducted in special class in half yearly leave

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive