ஒரே
இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஊழியர்கள், பொறியாளர்களை,
மீண்டும் இடமாற்றம் செய்யும் பணியில், மின் வாரியம் தீவிரம் காட்டி
வருகிறது.தமிழக மின் வாரியத்தில், கணக்கீட்டாளர், உதவி பொறியாளர் உட்பட, 85
ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். அவர்களில், தலைமை அலுவலகம், பிரிவு
அலுவலகங்களில் சிலர், ஒரே இடத்தில், பல ஆண்டுகளாக உள்ளனர். ஊழியர்கள்
மற்றும் பொறியாளர்கள், லஞ்சம் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட, ஒரே இடத்தில்,
பல ஆண்டுகள் பணிபுரிவதும் முக்கிய காரணம் என்பதை, உயரதிகாரிகள்
கண்டறிந்தனர். உத்தரவுஇதையடுத்து, ஒரே அலுவலகத்தில், மூன்று ஆண்டுகளுக்கும்
மேலாக பணிபுரிவோரை இடமாற்றம் செய்ய, 2017 செப்டம்பரில், மின் வாரியம்
உத்தரவிட்டது. சிலரின் குறுக்கீடுகளால், அந்த உத்தரவு கிடப்பில்
போடப்பட்டது. அடர்ந்த வன பகுதியில் உள்ள நீர் மின் நிலையங்களில்
பணிபுரிவோர், மூன்று ஆண்டு இடமாற்ற உத்தரவை அமல்படுத்துமாறு கோரிக்கை
விடுத்தனர். இதையடுத்து, 2018ல், மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில்
பணிபுரிவோர் இடமாற்றம் செய்யப்பட்டனர்.இது குறித்து, மின் ஊழியர்கள்
கூறியதாவது:மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, ஒரே இடத்தில் பணிபுரிவோரை இடமாற்றம்
செய்ததில், அரசியல், உயரதிகாரிகள் சிபாரிசு உடையவர்களுக்கு விலக்கு
அளிக்கப்பட்டது. அவர்களில் சிலர் தங்களுக்குள், சிண்டிகேட் அமைத்து,
ஏற்கனவே வேலை செய்த அலுவலகத்திற்கு, அருகில் இடமாற்றம் பெற்றனர்.
வலியுறுத்தல்இதனால், பலர் பாதிக்கப்பட்டனர். எனவே, மீண்டும் இடமாற்ற
உத்தரவை பாரபட்சமின்றி செயல்படுத்துமாறு, அதிகாரிகளிடம் வலியுறுத்தப்
பட்டது. இதனால், ஒரே இடத்தில், மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிவோரின்
விபரங்களை, அதிகாரிகள் சேகரித்து வருகின்றனர். விரைவில், அவர்கள் இடமாற்றம்
செய்யப்படுவர்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
Revision Exam 2025
Latest Updates
Home »
» ஒரே இடத்தில் பல ஆண்டுகள் பணிபுரியும் ஊழியர்கள் இடமாற்றம்?
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...