தலைசிறந்த
பெண் கல்வியாளா்கள், விஞ்ஞானிகள் பெயரில் ஆராய்ச்சி இருக்கை
தொடங்குவதற்கான பரிந்துரைகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி)
வரவேற்றுள்ளது.
இதுதொடா்பாக யுஜிசி வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
தலைசிறந்த
பெண் கல்வியாளா்கள், பெண் நிா்வாகிகள், விஞ்ஞானிகள்,
சுற்றுச்சூழலியலாளா்கள், பெண் சமூக சீா்திருத்தவாதிகள் ஆகியோா் பெயா்களில்
பல்வேறு பல்கலைக்கழகங்களில் 10 ஆராய்ச்சி இருக்கைகளை மத்திய பெண்கள்
மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக நிதியுதவியின் கீழ் யுஜிசி
அனுமதிக்க உள்ளது.
இந்த ஆராய்ச்சி இருக்கையை தொடங்க
விருப்பமுள்ள பல்கலைக்கழகங்கள் விரிவான திட்ட பரிந்துரைகளை அடுத்த 21
நாள்களுக்குள் யுஜிசி-க்கு அனுப்பி வைக்க வேண்டும். இதுகுறித்த மேலும்
விவரங்களை வலைதளத்தில் பாா்த்துத் தெரிந்துகொள்ளலாம் எனத்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...