தமிழகம்
முழுவதும் 23,928 அரசு ஆரம்ப பள்ளிகள், 7,260 நடுநிலைப் பள்ளிகள், 3,044
உயர்நிலைப் பள்ளிகள், 2,727 மேல்நிலைப்பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த
பள்ளிகளில் 56,55,628 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். மாவட்ட வாரியாக
தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் 25,01,483 பேரும், மாணவிகள் 24,67,455
ேபரும் பயின்று வருகின்றனர். மாவட்ட வாரியாக உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் 42,86,450 மாணவர்களும், 41,09,752 மாணவிகளும் பயின்று
வருகின்றனர். கடந்த மாதங்களில் கல்வித்துறை சார்பில் பாடப்புத்தகங்கள்
தொடங்கி பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் அரசு பள்ளி
மாணவர்கள் விளையாட்டில் ஆர்வமின்றி உள்ளனர். காரணம் அரசு பள்ளி மாணவர்களை
விளையாட்டு போட்டிகளில் சரிவரி ஊக்கப்படுத்துவதில்லை. ஒரு சில அரசு பள்ளி
மாணவர்கள் தேசிய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தாலும் அது அவர்களோடு
முடிந்து விடுகிறது.எனவே தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் பயின்று வரும்
மாணவர்களை விளையாட்டிலும் ஊக்கப்படுத்தும் விதமாக இனி பாடங்களில் பெற்ற
மதிப்பெண் வைத்து வழங்கப்படும் ரேங்க் கார்டை போல, விளையாட்டில்
மாணவர்களின் திறனை அறிய ரேங்க் கார்டு வழங்கப்படுகிறது. இதில் மாணவர்களின்
பெயர், வரிசை எண், வகுப்பு, பிறந்ததேதி, உயரம், எடை பள்ளி பெயர், முகவரி
ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும்.மேலும் மாணவர்கள் தடகளம், கை பந்து,
கால்பந்து என்று எந்த போட்டியில் ஆர்வத்துடனும் சுறு, சுறுப்புடனும்
உள்ளார் என்று மதிப்பெண் வழங்கப்படும். இதில் 8, 9, 10 ஆகிய மதிப்பெண்களை
பெறுபவர்களை விளையாட்டு துறை சார்பில் தேர்ந்தெடுத்து மேலும் மாவட்டம்
மற்றும் மாநில, தேசிய அளவில் விளையாட்டில் சாதனைகள் புரிய நடவடிக்கை
எடுக்கப்படும். அதேபோல் வேலூர் மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் பயிலும்
மாணவர்களை விளையாட்டில் ஊக்குவிக்க, ரேங்க் கார்டு வழங்கும் பணிகள்
விளையாட்டு துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்மூலம் அரசு பள்ளி
மாணவர்களும் விளையாட்டில் சாதிக்கும் நிலை ஏற்படும் என்று மாவட்ட
விளையாட்டு துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Half Yearly Exam 2024
Latest Updates
Home »
» பாடங்களுக்கு வழங்குவதைபோல மாணவர் விளையாட்டு திறன் அறியவும் ரேங்க் கார்டு: தமிழக அரசு பள்ளிகளில் ஏற்பாடு
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...