இடைநிலை / மேல்நிலை முதலாமாண்டு / இரண்டாமாண்டு பொதுத் தேர்வெழுதும் மாற்றுத் திறனாளித் தேர்வர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் விவரம்
குறைபாட்டின் தன்மை வழங்கப்படும் சலுகைகள்
கண் பார்வையற்றோர்
1 . தேர்வெழுத சொல்வதை எழுதுபவர் நியமனம் .
2 . தேர்வெழுத கூடுதல் 1 மணிநேரம் .
காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதோர்
1 . இரு மொழிப் பாடங்களில் ஏதேனும் இயலாதோர் ஒரு மொழிப்பாடம் தேர்வு எழுத விலக்கு அளித்தல் .
2 . தேர்வெழுத கூடுதல் 1 மணிநேரம் .
எதிர்பாராத விபத்துக்களால் உடல்
ஊனமுற்று தேர்வு எழுத நியமனம் .
1 . தேர்வெழுத சொல்வதை எழுதுபவர்
2 . தேர்வெழுத கூடுதல் 1 மணிநேரம் .
நோயால் பாதிக்கப்பட்டோர் மற்றும் எதிர்பாராத விபத்தினால் கைமுறிவு ஏற்பட்டோர் . மனநலம் குன்றியோர்
1 . இருமொழிப் பாடங்களில் ஏதேனும் ஒரு மொழிப் பாடம் தேர்வு எழுத விலக்கு அளித்தல் .
2 . தேர்வெழுத கூடுதல் 1 மணிநேரம்
3 . தேர்வெழுத சொல்வதை எழுதுபவர் நியமனம் .
டிஸ்லெக்சியா குறைபாடு
1 . தேர்வெழுத கூடுதல் 1 மணி நேரம்
2 . கால்குலேட்டர் பயன்படுத்த அனுமதி .
3 . கிளார்க் அட்டவணை பயன்படுத்த அனுமதி .
4 . கேள்வித்தாளை படித்துக்காட்ட அல்லது செல்வதை எழுத ஆசிரியரை நியமிக்க அனுமதி ( இரண்டில் ஏதேனும் ஒரு சலுகை அன்னாரின் கோரிகை படி ) .
5 . ஏதேனும் ஒரு மொழிப்பாடம் எழுதுவதிலிருந்து தவிர்ப்பு வழங்குதல் .
6 . மொழி அல்லாத பிற பாடங்களை திருத்தும் போது எழுத்து பிழைக்கென மதிப்பெண் குறைக்காமல் பாடப் பொருளை மட்டும் கணக்கில் கொண்டு மதிப்பெண் அளித்தல் .
7 . பள்ளியில் முறையாக பயின்றோ அல்லது பள்ளியில் முறையாக பயிலாமல் தனிப்பட்ட முறையில் ஆசிரியரிடம் சிறப்பு பயிற்சி பெற்ற தனித் தேர்வராக பொதுத் தேர்வு எழுத அனுமதித்தல் .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...