உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்திற்கு கலந்தாய்வு
முடிந்தும், பணி ஆணை வழங்காததால், விடைத்தாள் மதிப்பீடுசெய்வதில் சிக்கல்
ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகம் முழுக்க, அரையாண்டு தேர்வு டிச. 11 முதல் 23 வரை நடந்தது.இதில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உடற்கல்வி தேர்வு நடத்தப்பட்டது.
பல அரசுப்பள்ளிகளில், உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. இதற்கு, கடந்த 2017ல், ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில், போட்டித்தேர்வு நடத்தி, சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் முடிந்தன.ஆனால் தற்போது வரை, பணி ஆணை வழங்கப்படவில்லை. இதனால், மாணவர்களை விளையாட்டு போட்டிகளுக்கு தயார்ப்படுத்துவதிலும், சிக்கல் நீடிப்பதாக புகார் எழுந்துள்ளது.தமிழ்நாடு கலையாசிரியர் நலசங்க மாநில தலைவர் ராஜ்குமார் கூறுகையில், ''ஆசிரியர் தேர்வு வாரியம், கடந்த 2017 ல், தையல், இசை, ஓவியம், உடற்கல்வி ஆகிய, நான்கு பிரிவுகளிலும், போட்டித்தேர்வு நடத்தியது.
இதில், உடற்கல்வி பாடத்திற்கு மட்டும், 663 பணியிடங்கள் தற்போது வரை நிரப்பப்பட வில்லை. இந்நிலையில், அனைத்து பள்ளிகளுக்கும், உடற்கல்வி தேர்வு நடத்தியதோடு, வினாத்தாள் மதிப்பிட்டு, எமிஸ் இணையதளத்தில், பதிவேற்ற வலியுறுத்தப்படுகிறது.இதோடு, தினசரி ஒரு மணி நேரம், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, உடல் சார்ந்த பயிற்சிகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிரியரே இல்லாமல், இப்பணிகள் மேற்கொள்வதில் சிரமம் உள்ளதால், விரைவில் காலியிடங்கள்நிரப்ப வழிவகை செய்ய வேண்டும்,'' என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...