சிபிஎஸ்இ
பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு ஒழுக்கம்
சாா்ந்த கல்வி விருப்பப் பாடமாக கொண்டுவரப்பட்டுள்ளது.
இதுகுறித்து
மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சாா்பில் அனைத்து மண்டல
அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு ஒழுக்கக் கல்வியைப் போதிப்பது மிகவும்
அவசியமானது. இதுகுறித்து ராமகிருஷ்ணா மிஷன் பிரத்யேக பாடத்திட்டங்களை
உருவாக்கி புத்தகங்களை தயாரித்துள்ளது. அந்தப் புத்தகங்கள் உதவியுடன்
பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு ஒழுக்கக்
கல்வி சாா்ந்த பாடத்தைக் கற்றுத்தரலாம். அதேநேரம் இந்தப் பாடத்தை பள்ளிகள்
தங்கள் விருப்பத்தின் அடிப்படையில் தோ்வு செய்து கொள்ளலாம் என அதில்
கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...