ஊராரின்
சந்தேகத்தை காரணங் காட்டி கர்ப்பிணியான தன் மனைவியை வனத்தில் தள்ளுகிறார்
கணவன். வனத்திலேயே வாழ்கிறாள், ஊர் திரும்பியதும் மடிகிறாள். -
இது 'ராமன், சீதா' கதை.
ஓர் அழகிய இளம் மங்கை. அவளுக்கு முதிர்ந்த கணவன்.
மனமுவந்து வாழ்கிறாள்.
ஒரு கட்டத்தில் கணவன் குஷ்டரோகியாகிறான்.
அதன்
பிறகும் அவளுக்கு வெறுப்பு ஏற்பட வில்லை. பண்ணாத குசும்பெல்லாம் அக் கிழடு
செய்தும் அவனை ஆராதிக்கிறாள். ஒரு கட்டத்தில் ஒரு தாசியை பார்த்து "நான்
இவளோடு கூட வேண்டுமென்கிறான். அதற்கும் அவள் இசைகிறாள். தாசிக்கு கூலியாக
தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள். தன் கணவனை
தோளில் தூக்கிச் சென்று தாசியின் வீட்டுக்குச் செல்கிறாள்.
- இது நளாயினி கதை.
இது வட மொழி இலக்கியங்கள்.
தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்து விட்டது அரசு.
தன்
இடப் பக்க மார்பை திருகி எறிந்து ஒரு நகரத்தையே எரிக்கிறாள், தன் உளளத்து
எரிச்சல் பற்றி எரிகிறது என கெக்கலிட்டு சிரிக்கிறாள், ஆவேசமாக எரித்த
படியே வேகமாக நடந்து சென்று சற்று நிதானித்து திரும்பி பார்க்கிறாள்,
'அனைத்தும் எரிந்து விட்டதா அல்லது இன்னும் மிச்சமிருக்கிறதா' என்று. - இது
சிலப்பதிகாரம்.
அவள் ஓர் பேரழகி. அவள் அழகில்
கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான். அவள் வலக் கையில்
வாங்கி இடக் கையில் தூர வீசிவிட்டு சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் ஆசிட்
வீச வில்லை, ஆபாச படமெடுத்து மிரட்ட வில்லை. அவள் உணர்வுக்கு மதிப்பளித்து
சென்று விடுகிறான். - இது மணிமேகலை
அவள் கணவன்
அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். அவளும்
விவரமறியாது கூடவே செல்கிறாள். மலை உச்சியை எட்டியதும்தான் தெரிகிறது,
'இவன் தன்னை கொலை செய்ய அழைத்து வந்திருக்கிறான்' என்று.
யோசிக்கிறாள். இறுதியாக கணவனிடம் பேசுகிறாள், "நீ என்னை கொல்லத்தானே அழைத்து வந்திருக்கிறாய்? நான் மடிவது பற்றி எந்த கவலையுமில்லை.
ஒரே
ஒரு வேண்டுகோள்தான். என் கணவர் நீங்கள். உங்களை மூன்று முறை சுற்றி வந்து
காலில் விழுந்து ஆசி வாங்கினால் மோட்சம் செல்லும் பாக்யம் கிட்டும் எனக்கு"
என்று.
"அட அதனாலென்ன தாராளமாக சுற்றி வா" என்று கணவனும் சொல்ல,
சுற்றுகிறாள்.
முதல் சுற்று, இரண்டாம் சுற்று, மூன்றாம் சுற்றில் தன் கணவனை
மலையிலிருந்து கீழே தள்ளி விட்டு கொல்கிறாள். - இது குண்டலகேசி
இது தமிழ் இலக்கியங்கள்.
ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதினை சொன்னதுதான் வடமொழி இலக்கியங்கள்.
அவன்
ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால், அறம் தவறினால் அடங்காதே, அவனை
எதிர்த்து போராடு என்பதை போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள்.
தமிழ் மொழி எப்போதுமே பெண்களை கொண்டாடுவது. வடமொழிகள் பெண்களை அடிமைத் தனமாக்குவது.
உலகளவில்
பிரசித்தம் பெற்ற ஓர் அயல் நாட்டு எழுத்தாளர் கூறியது இது, "என்னை அடிமைப்
பட்ட பெண்ணாகப் படைக்காமல் ஆணாகப் படைத்த இறைவனுக்கு நன்றி" என்று.
உலகம் முழுவதுமே பெண்களை காலுக்கு கீழே வைத்திருந்த காலகட்டத்தில் பெண்களை மேன்மைமிகு பொக்கிஷமாக போற்றிப் புகழ்ந்தது தமிழ் சமூகம்.
எழுத்தாளர் சு.வெ கூறியது இது.
சங்ககாலத்தில்,
47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டும்தான்.
பாரியின் மகள்கள் 'அங்கவை, சங்கவை' எழுதிய 'அற்றைத் திங்கள் அவ்
வெண்ணிலவில்' என்ற பாடலுக்கு ஒப்பான சோகத்தை கூறும் பாடல் உலகிலேயே
வேறெங்கும் கிடையாது. உலக மொழிகளின் தாய் என்று கூறப்படும் கிரேக்கத்தில்
கூட 7 பெண்கள்தான் உண்டு.
தேவபாஷை என்று கூறப்படும்
சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. ஏன் சமஸ்கிருதத்தை
வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது.
ஆனால் தங்கக் கட்டிகளிலும், பானை ஓடுகளிலும் பெண்களின் பெயரை பொரித்து புழங்குமளவிற்கு தமிழ் சமூகம் நாகரீகம் கொண்டது.
ஆண்டாண்டு
காலமாக பெண்களை போற்றிப் புகழ்ந்து கொண்டாடிய சமூகம் தமிழ் சமூகம். "உன்
தாத்தா காலத்தில் பெண் படித்தாளா?".எனக் கேட்கிறார்கள். தாத்தா காலத்தில்
தாத்தாவே படிக்க வில்லையே! ஏழு பிள்ளையைப் பெற்றவள் தாத்தாவைப் போல கமலக்
கல்லின் ஓரத்தில் நின்று கனவட்டத்தை பிடித்து இழுத்து ஊற்றி நீர் பாய்ச்ச
முடியுமா? பெண்ணை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டார்கள் என்பதில் நியாயம்
உள்ளதா? ஆரிய மரபினர் சிலர் ஐயராத்தில் பல்லாங்குழியாடி காலத்தை
கழித்திருக்கலாம். நம் பெண்கள் அப்படியா செய்தார்கள்? காலை பத்து மணிக்குள்
பதினைந்து பனையேறி இறக்கி வரும் பதனீரை சாயங்காலத்திற்குள் கருப்பட்டியாக
மாற்றியவள் பெண்ணல்லவா?
மூன்று நான்கு பெண்களை திருமணம் செய்து
வஞ்சித்த ஆண் வர்க்கம் இருந்தது உண்மை. அது இப்போதும் அப்படியேதான்
இருக்கிறது. சற்றே நவீனமாய் தாலியை தவிர்த்து உள்ளார்கள் அவ்வளவுதான்.
உடலளவில்
சற்றே பெண் தளர்ந்தவள் என சொல்கிறார்கள். . ஆனால் ஒரு பெண் தன் கருவுற்ற
நாளிலிருந்து குழந்தைக்கு மூன்று வயது பூர்த்தியாகும் வரை முழு உறக்கத்தை
எட்டவே முடியாது. அவள் ஆணுக்கு நிகரானவளல்ல. அவனை விட ஒருபடி மேல்தான்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...