Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு ( Final Aptitude Test ) நடைபெறும் வாரங்கள் அறிவிப்பு.

IMG_20191218_134944


திட்ட ஏற்பளிப்புக் குழுக் கூட்ட நடவடிக்கை ஒப்புதலின்படி Quality Intervention ( Secondary ) என்ற தலைப்பின் கீழ் அரசு உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு Aptitude Test at School Level நடத்த திட்டமிடப்பட்டுள்ளது .

இடைநிலை வகுப்பு பயிலும் மாணவர்களின் பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு , தங்களது ஆர்வம் பொது அறிவு மற்றும் எவ்வகைத் துறையில் நாட்டம் மேலோங்கி உள்ளது என்பதைக் கண்டறிந்து அத்துறையில் சிறந்து விளங்கும் கல்வி உளவியலாளர்கள் மூலம் அம்மாணவர்களுக்கு வழிகாட்டுதலே இத்தேர்வின் முக்கிய நோக்கமாகும் . இக்கல்வி ஆண்டில் திட்ட ஏற்பளிப்புக் குழு ஒப்புதல் அளித்துள்ள 8 , 51 , 999 மாணவர்களுக்கு நாட்டமறித் தேர்வு நடத்தப்பட உள்ளது . இத்தேர்வு ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்படும் .

இத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து குழுக்கள் அமைத்து செயல்பட பார்வை 2 இல் குறிப்பிட்டுள்ளவாறு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது . இதன் தொடர்ச்சியாக தற்போது மாணவர்களின் பயிற்சிக்காக TNTP இணையதளத்தில் மாதிரி வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களும் பள்ளிகளில் 9 மற்றும் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இத்தேர்வினை எழுதும் வகையில் நாட்டமறித் தேர்வின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும் . இத்தேர்வு நடத்தும் முன் பள்ளியில் இணையதள வசதியுடன் கூடிய கணினி செயல்படுகிறதா என்பதை கண்டறிய வேண்டும் . இத்தேர்வினைக் கண்காணிக்க பள்ளி ஆசிரியர்களை நியமித்தல் வேண்டும் .
IMG_20191218_134956

           செயல்திட்டம் ( Action Plan ) 

முதல் நிலை 

மாதிரி பயிற்சித் தேர்வு வினாத்தாள் தற்போது 90 வினாக்கள் ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் TNTP இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது . இந்த 90 வினாக்களுக்கு 1 அரை மணி நேரத்தில் பதில் அளிக்கும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் இணையதள வழியாக பயிற்சி அளிக்க வேண்டும் . இது இறுதித் தேர்வில் கலந்து கொள்வதற்கு அவர்களுக்கு உதவியாக இருக்கும் .

இரண்டாவது நிலை

இறுதித் தேர்விற்கு முன்பாக ( Pilot Study ) முன்மாதிரி தகுதிநிலைத் தேர்வு குறிப்பிட்ட சில மாவட்டங்களில் மட்டும் குறிப்பிட்ட பள்ளிகளில் மட்டும் நடைபெறும் . தெரிவு செய்யப்பட்ட மாவட்டங்களில் கீழ்க்காணும் 3 வகையான பள்ளிகளில் நடைபெறுதல் வேண்டும் . உயர்நிலை , மேல்நிலை ஆகிய இரு பிரிவிலும் நகர்ப்புறம் , கிராமப்புறம் ஆகிய அமைவிடங்களில் பள்ளிகளைத் தேர்வு செய்ய வேண்டும் .

1 . ஆண்கள் மட்டும் பயிலும் பள்ளி
2 . பெண்கள் மட்டும் பயிலும் பள்ளி
3 . இருபாலர் பயிலும் பள்ளி

இந்த முன்மாதிரித் தேர்வு இணையதளம் மூலம் 2020 , ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் . 90 வினாக்கள் கேட்கப்படும் . 90 நிமிடத்தில் விடையளிக்க வேண்டும் .

மூன்றாம் நிலை

ஜனவரி , 2020 இரண்டாவது வாரத்தில் 10ஆம் வகுப்பிற்கும் நான்காவது வாரத்தில் 9ஆம் வகுப்பிற்கும் நாட்டமறி இறுதி தேர்வு ( Aptitude Final Test ) இணையதளம் வழியாக நடத்தப்படும் . மாணவர்கள் பள்ளியிலேயே தேர்வு எழுதுவதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப்பட்ட தலைமையாசிரியர்கள் இணையதள வசதியுடன் கணினிகளைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும் . அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் அவ்வப்போது இதுகுறித்து வழங்கப்படும் அறிவுரைகளைக் கவனத்தில் கொண்டு தேர்வை நல்ல முறையில் நடத்தி முடிக்கத் தேவையான நடவடிக்கைகளை இப்போதிருந்தே மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் .




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive