அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ‘நாட்டமறித் தேர்வு’ ஜனவரி2-வது வாரத்தில் நடைபெறும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.தமிழக அரசுப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறமைகளைக் கண்டறிந்து மேம்படுத்த, பள்ளிகள் அளவில் ‘நாட்டமறித் தேர்வு’ நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள், ஒருங்கிணைந்த மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் நேற்று அனுப்பப்பட்டன. அதன் விவரம்:அரசுப் பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு படிக்கும் 8 லட்சத்து 51 ஆயிரத்து 999 மாணவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் தமிழ்வழியில் கணினி வழியில் நாட்டமறித் தேர்வுநடத்தப்பட உள்ளது.இதற்கான மாதிரி வினாத்தாள் கள் தமிழ்நாடு ஆசிரியர் வலைதளத்தில் (டிஎன்டிபி) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.அதிலுள்ள 90 வினாக்களுக்கு ஒரு மணி நேரத்தில் பதில் அளிக்கும்படி மாணவர்களுக்கு இணையதள பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின் ஜனவரி முதல் வாரத்தில் மாணவர்களுக்கு முன்மாதிரித் தேர்வு நடைபெறும்.இந்தத் தேர்வில் 90 வினாக் கள் கேட்கப்படும். அதற்கு மாணவர்கள் 90 நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும். இந்த மாதிரி தேர்வு குறிப்பிட்ட சில மாவட்ட பள்ளிகளில் மட்டும் நடைபெறும்.
இதைத்தொடர்ந்து ஜனவரி 2-வது வாரத்தில் 10-ம் வகுப்புக்கும், 4-ம் வாரத்தில் 9-ம் வகுப்புக்கும் நாட்டமறி இறுதி தேர்வு இணையதளம் வழியாக நடத்தப்படும்.எனவே, மாணவர்கள் தங்கள் பள்ளியிலேயே தேர்வு எழுது வதற்கு ஏற்ற வகையில் சம்பந்தப் பட்ட தலைமை ஆசிரியர்கள்இணையதள வசதியுடன் கணினி களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.தேர்வை கண்காணிக்க பள்ளி ஆசிரியர்களை நியமித்தல் வேண் டும். முதன்மைக் கல்வி அதி காரிகள், வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தேர்வை நல்ல முறை யில் நடத்தி முடிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள் ளது.
இந்தத் தேர்வில் 90 வினாக்கள் கேட்கப்படும். அதற்கு மாணவர்கள் 90 நிமிடத்தில் பதிலளிக்க வேண்டும். இந்த மாதிரி தேர்வு குறிப்பிட்ட சில மாவட்ட பள்ளிகளில் மட்டும் நடைபெறும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...