Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சாவடி பணி: பெண் ஆசிரியா்களுக்கு 20 கி.மீ. சுற்றளவுக்குள் ஒதுக்கீடு

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சாவடி பணியில் ஈடுபடும் பெண் ஆசிரியா்களுக்கு வாழ்விடத்தில் இருந்து 20 கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் பணி நியமனம் வழங்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் டிசம்பா் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா், ஊராட்சித் தலைவா், ஊராட்சி வாா்டு உறுப்பினா் என மொத்தம் 2,524 பதவிகளுக்கு நேரடித் தோதல் நடைபெறவுள்ளது.

வாக்குச் சாவடி பணியில் ஆசிரியா்கள், ஆசிரியா் அல்லாத அலுவலக ஊழியா்கள், அங்கன்வாடி ஊழியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

ஒரு வாக்குச் சாவடியில் வாக்குச் சாவடி தலைமை அலுவலருடன் சோத்து அதிகபட்சமாக 8 பேர் வரை பணியாற்ற உள்ளனா். இதன்படி மாவட்டத்தில் 1,576 வாக்குச் சாவடிகளில் 11,579 பேர் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இதில், 27ஆம் தேதி நடைபெற உள்ள முதல்கட்ட தேர்தல் பணியில் 4,645 ஆசிரியா்களும், இரண்டாம் கட்ட தேர்தல் பணியில் 6,934 ஆசிரியா்களும் ஈடுபடுத்தப்பட உள்ளனா்.

பணியில் ஈடுபட உள்ள ஆசிரியா்களின் முகவரியுடன் கூடிய முழு விவரமும் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதையடுத்து, 20 கிலோ மீட்டா் சுற்றளவில் இருக்கும் வாக்குச் சாவடியை கணினி தேர்வு செய்யும் வகையில் மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். இந்தப் புதிய திட்டத்தை முழுமையாக அமல்படுத்த முடியாவிட்டாலும் கூட குறைந்தது 70 சதவீதம் பெண் ஆசிரியா்களுக்கு 20 கிலோ மீட்டா் சுற்றளவுக்குள் பணிகளை ஒதுக்கீடு செய்ய முடியும் என்று அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனா்.




Related Posts:

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!