நடப்பாண்டுக்கான
எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 காலாண்டு தேர்வு நடத்தப்பட்ட
போது, தேர்வு வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானது. ‘ஷேர்சாட்’ என்ற
செல்போன் செயலியில் இந்த வினாத்தாள் வெளியாகின. இந்த சம்பவம் பெரும்
பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் இதனை கல்வித்துறை திட்டவட்டமாக
மறுத்தது.இந்தநிலையில் அரையாண்டு தேர்வு தமிழகம் முழுவதும் பொது தேர்வாக
ஒரே வினாத்தாள் என்ற அடிப்படையில் நடத்தப்படும் என்று பள்ளிக்கல்வி துறை
அறிவித்தது.அதன்படி, கடந்த 11-ந்தேதி முதல் பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2
வகுப்புகளுக்கும், கடந்த 13-ந்தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கும்
தேர்வு தொடங்கியது.தொடர்ந்து தேர்வு நடைபெற்று வரும் நிலையில், செல்போன்
செயலியான ‘ஷேர்சாட் மற்றும் ஹலோ’ ஆகியவற்றில் தேர்வு வினாத்தாள்
தொகுப்புகள் பதிவிடப்பட்ட வண்ணம் இருந்தன. ஆனால் அதில் பல வினாத்தாள் போலி
யானவையாக இருந்தன.இந்தநிலையில் நேற்று பிற்பகலில் நடந்த பிளஸ்-1 வேதியியல்
தேர்வுக்கான வினாத்தாள் ‘ஹலோ’ என்ற செல்போன் செயலியில் தேர்வுக்கு
முன்பாகவே வெளியாகி இருந்தது.அதில் பொது அரையாண்டு தேர்வு வினாத்தாள்-2019
என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் மாணவர்களின் பதிவு எண் கட்டத்தில்
எந்த எண்ணும் பதிவாகவில்லை. அதே வினாத்தாள் தான் பிற்பகல் நடந்த வேதியியல்
தேர்வில் கொடுக்கப்பட்டு இருந்தது.காலாண்டு தேர்வில் அந்தந்த மாவட்டத்தில்
வினாக்கள் தயாரிக்கப்பட்டதால் வினாத்தாள் வெளியாகி இருக்கும் என்று நினைத்த
பள்ளிக்கல்வி துறை, பொது அரையாண்டு தேர்வை ஒரே வினாத்தாள் அடிப்படையில்
நடத்தலாம் என்று முடிவு செய்து அறிவித்தது. ஆனால் தற்போதும் வினாத்தாள்
வெளியாகி இருக்கிறது.இதனால் கல்வித்துறை அதிர்ச்சி அடைந்து இருக்கிறது.
இதற்கு காரணமானவர்கள் யார்? என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்த
வேண்டும் என்றும், இதுபோன்ற சம்பவங்கள் பொதுத்தேர்வில் நடத்தப்பட்டால்
மாணவர்களின் எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகிவிடும் என்றும்
கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர்கள் ‘இதனை தடுக்க உரிய
நடவடிக்கையை பள்ளிக்கல்வி துறை மேற்கொள்ள வேண்டும் என்றும், செல்போன்
செயலியில் இதுபோன்ற தகவல்களை பரிமாறுவதை தடுக்க வழிவகை செய்ய வேண்டும்’
என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
Source: Dinathanthi
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...