மாணவர்கள் பொங்கல் தினத்தன்று பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
ஜனவரி 16-ம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விடுமுறை என்பது ஜனவரி 14-ம் தேதி போகிப்பண்டிகை, ஜனவரி 15-ம் தேதி பொங்கல் பண்டிகை, ஜனவரி 16-ம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் உழவர் திருநாள், ஜனவரி 17-ம் தேதி திருவள்ளுவர் தினம் என நான்கு நாட்கள் தொடர் விடுமுறை விடப்படுவது வழக்கமான ஒன்று. அதேபோல் வரும் 2020-ம் ஆண்டும் ஜனவரி 14 ஆம் தேதி முதல் 17-ம் தேதி வரை பொங்கல் விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் திடீரென ஜனவரி 16-ம் தேதி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு கண்டிப்பாக வரவேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. ஜனவரி 16-ம் தேதி பொங்கல் விடுமுறை தினத்தன்று, பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இந்த உரையை கேட்க 9-ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து மாணவர்களும் தவறாமல் பள்ளிக்கு வருவதை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மேலும் பள்ளிகளில் தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் இதர சாதனங்களை பழுது நீக்கம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்வு பற்றி பிரதமரின் கலந்துரையாடல் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பள்ளிகளில் உரிய ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் அவர்களின் பேச்சை, கேட்கவா, பார்க்கவா,
ReplyDeleteஎப்படி 16 தேதி அன்றைய பொங்களை என்னைக்கு கொண்ட்டாவீங்க, தமிழர்கள் எங்களுக்குன்னு இருப்பது பொங்கல் விழா மட்டும்தான் அதையும் வீனாக போகனுமா?
சரி ,,13 தேதி சென்னையிலிருந்து கன்னியாகுமரி போயி , திரும்பவும் பிரதமர் பேச்சை/பார்க்க 16 ந்தேதி பள்ளிக்கு வரனுமுன்னா 15 ந்தேதி புறப்படணும்,
இடையில் 14ந்தேதி மட்டும் வீட்டில் இருக்கணும். 16 ந்தேதி பிரதமர் பேச்சை/பார்க்க விட்டு திரும்பவும் காணும் பொங்கல் கொண்டாட ஊருக்கு போகணும், முடிஞ்ச உடனே வேலைக்கு போறவர்கள் என்பதால் தங்கள் புள்ளை குட்டிகளை கூப்பிட்டுகிட்டு திரும்பவும் சென்னைக்கு வரணும்.
சார் கொஞ்சமாவது யோசிக்கிறீங்களா.
இல்லை பிள்ளைகளை மட்டும் தனியா பள்ளிக்கு அனுப்பி வைக்கலாமா? இது தனியாக அனுப்பக்கூடிய காலமா? பொம்பளை பிள்ளைகளை பெற்றுவிட்டு என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று பயம் கொள்ளும் காலத்தில் என்ன சார் இது?