Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மண்டையில் உள்ள சளியை வெளியேற்றும் 13 மிளகு சித்த மருத்துவ முறை!

முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் (மண்டையில்) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லதுதான், மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது.தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது.
ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரும்.
இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும்.
தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.
மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார்.
இரண்டு சிறிய ஸ்பூன் அலவு மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்து மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும்.
அவ்வாறு பூசினால் மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிடும்
ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமலா?
உங்கள் வீட்டில் இருந்தப்படியே, இந்த இயற்கை வீட்டு வைத்திய முறையை பின்பற்றினால் இந்த சின்ன சின்ன உடல்நலக் குறைபாடுகளை மிக எளிதாக சரி செய்துவிடலாம்.
ஜலதோசம்:
ஏலக்காயை நன்கு பொடித்து பொடி செய்துக்கொள்ளவும். இதை, தினமும் காலை, மாலை இருவேளை சாப்பிடுவதற்கு முன் வெறும் வயிற்றில் ஒரு தேக்கரண்டி பொடியை நெய்யில் கலந்து சாப்பிட்டு வந்தால் ஜலதோஷம் சரியாகிவிடும்.சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேன் கலந்து சாப்பிட்டு வந்தால், மூக்கடைப்பு பிரச்சனைக்கு நல்ல தீர்வுக் காண முடியும்.
உடலுக்கு நிறத்தைக் கூட்டும் தன்மை கொண்டது. மஞ்சளை தீயில் சுட்டு, அதன் புகையைச் சுவாசித்தால், மூக்கடைப்பு விலகி, சளி நீங்கும்.
சளி:
முருங்கைகாயை நசுக்கி, அதனுடைய சாற்றினை எடுத்து, அத்துடன் சம அளவு தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் சளி பிரச்சனை குணமாகும்.
ஜலதோஷம், மூக்கடைப்பு, இருமலா?
தேவையான பொருட்கள்:
1 கப் ஆப்பிள்,
1 கப் எலுமிச்சைச் சாறு,
1 கப் இஞ்சி சாறு,
1 கப் வெள்ளைப்பூண்டு
செய்முறை!
இவற்றை எடுத்து ஒன்றாக கொதிக்க வைத்து, பிறகு அது மாவு போல் ஆனவுடன் தனியாக எடுத்து, அத்துடன் தேவையான அளவு தேன் கலந்து அதை காலை மற்றும் இரவு இருவேளை ஒரு தேக்கரண்டி சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், ஜீரணம் போன்றவை சரியாகும்.மேலும், இது உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்கவும் பயனளிக்கும்.
 
இதர வழிகள்:-
சளித்தொல்லை மற்றும் மூக்கடைப்பு இருந்தால் உங்களது அன்றாட வேலையே பெரிதும் பாதிக்கப்படும். அதனை குறைக்க நீங்கள் குடிக்கிற தண்ணீரில் நான்கைந்த ஓமவல்லி இலைகளை போட்டு கொதிக்க வைத்திடுங்கள். இளம் பச்சை நீராக அந்த நீர் மாறிடும். பின்னர் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு இப்படி ஓமவல்லி இலையை போட்டு கொதிக்க வைத்த நீரை குடித்து வந்தால் நல்ல மாற்றம் தெரிந்திடும்
 
பூண்டு மிகச்சிறந்த ஆன்டி-பயாடிக். சளி பிடித்திருக்கும் போது, தினமும் 2 பல் பச்சை பூண்டு சாப்பிட்டு வர, அதில் உள்ள மருத்துவ குணங்கள், உடலைத் தாக்கிய கிருமிகளை அழித்து, உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, சளியில் இருந்து விரைவில் விடுபடச் செய்யும்.
சளி, இருமலில் இருந்து எலுமிச்சை, பட்டை, தேன் கலவை நல்ல நிவாரணத்தை வழங்கும். அதற்கு 1/2 டீஸ்பூன் தேனில் சில துளிகள் எலுமிச்சை சாறு மற்றும் 1 சிட்டிகை பட்டைத் தூள் சேர்த்து கலந்து, தினமும் 2 முறை உட்கொள்ள, சளி, இருமலில் இருந்து சீக்கிரம் விடுபடலாம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive