ரிஷபம்: நீண்டநாள் பிரச்சினைகளுக்கு சுமுகத் தீர்வு கிடைக்கும். வழக்குகள் சாதகமாகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்துவேறுபாடு நீங்கும். கலைப்பொருட்கள் சேரும்.
மிதுனம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்த
இடத்திலிருந்து பணம் வரும். கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.
பால்ய நண்பரை சந்திப்பீர்கள்.
கடகம்: உடல் உஷ்ணம் அதிகரிப்பால் சில அவதிகள் ஏற்படும். யாருக்கும்,
எதற்காகவும் உறுதிமொழியோ, உத்தரவாதமோ தரவேண்டாம். பொதுக் காரியங்களை
முன்னின்று நடத்துவீர்கள்.
சிம்மம்: அரசு அதிகாரிகளால் சில காரியங்கள் நிறைவேறும். திடீர் பயணங்கள்
ஏற்படும். விலகியிருந்த உறவினர்கள், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவார்கள்.
வாகனம் செலவு வைக்கும்.
கன்னி: எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். பணவரவு திருப்திகரமாக
இருக்கும்.. எதிர்ப்புகள், ஏமாற்றங்களை முறியடித்து வெற்றி பெறுவீர்கள்.
சகோதரர்கள் பக்கபலமாக இருப்பார்கள்.
துலாம்: எதிர்பார்த்த உதவிகள் தக்கசமயத்தில் கிடைக்கும். தெளிவான
முடிவுகளால் தொல்லைகள் நீங்கும். குடும்பத்தார் ஆதரவாக இருப்பார்கள்.
வீட்டை விரிவுபடுத்த முயல்வீர்கள்.
விருச்சிகம்: சவாலான காரியங்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.
திடீர் பயணம் உண்டு. விருந்தினர் வருகையால் வீடு கலகலப்பாகும்.
அக்கம்பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள்.
தனுசு: அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். பழைய
சொந்தபந்தங்கள் தேடி வருவார்கள். வேலை தொடர்பான முயற்சிகள் இழுபறியாகும்.
வெளி உணவுகளை தவிருங்கள்.
மகரம்: இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள்.
உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். பங்கு
வர்த்தகம் லாபம் தரும்
கும்பம்: சமயோசிதமாகச் செயல்பட்டு பல காரியங்களையும் முடித்துக்
காட்டுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த தொகையை தந்து முடிப்பீர்கள்.
மின்னணு சாதனம் வாங்குவீர்கள்.
மீனம்: அறிஞர்களின் நட்பு கிடைக்கும். மேல்படிப்புக்கான முயற்சிகள்
சாதகமாகும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு பெரிய பொறுப்புகள்
எதிர்பாராமல் கிடைக்கும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...