பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் வரும் மார்ச் மாதம் நடைபெற உள்ளன. இத்தேர்வுக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட கடைசி நாளுக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க தவறிய தனித் தேர்வர்கள் தற்போது சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப் பிக்கலாம்.ஏற்கெனவே பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வை பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் மார்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடைபெறும் தேர்வை பழைய பாடத்திட்டத்திலேயே எழு தலாம். அதேபோல், கடந்த ஆண்டு நேரடி தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாதவர்கள் தற்போது பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதுவதற்கும், பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க விரும்பும் தனித் தேர்வர்கள் ஜனவரி 1, 2 ஆகிய இரு தேதிகளில் அரசு தேர்வுத்துறை சேவை மையத்துக்கு நேரில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி மாவட்டங்கள் வாரியாக சேவை மையங்களின் விவரத்தை அரசு தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.gov.in)அறிந்துகொள்ளலாம். தேர்வுக்கட்டணம் மற்றும் ஆன் லைன் பதிவுக் கட்டணத்துடன் கூடு தலாக சிறப்பு அனுமதி கட்டணம் ரூ.1000-ஐ பணமாக சேவை மையத்தில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த உடன் ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் குறிப்பிடப்பட்டிருக் கும் விண்ணப்ப எண்ணை பத்தி ரமாக வைத்துக்கொள்ள வேண் டும். இந்த விண்ணப்ப எண்ணை பயன்படுத்தித்தான் பின்னர் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்ய முடியும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...