இதற்கான வசதி இ.பி.எப்.ஒ. இணையதளத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாத சம்பளம் வாங்கும் பணியாளர்களுக்கு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியகத்தில் இருந்து இ.பி.எப்.ஒ. இணையதளத்தில் யு.ஏ.என். எனப்படும் யுனிவர்சல் அக்கவுண்ட் நம்பர் கொடுக்கப்படும்.
அதில் தொழிலாளரின் பி.எப்., எண் மாறும், அவர் எத்தனை நிறுவனம் மாறினாலும், அவரது ஓய்வு காலம் வரை யு.ஏ.என். எண் மாறாது. தற்போது பான் எண் மற்றும் ஆதார் எண், ஆகியவை யு.ஏ.என். அக்கவுண்ட் நம்பருடன் இணைக்கப்படுவதால், அந்த நம்பர் தான் அவரது பணி ஓய்வு காலம் வரை இணையதளத்தில் நிரந்தரமாக பராமரிக்கப்படும்.
இந்நிலையில் மத்திய தொழிலாளர் நல அறக்கட்டளை அமைப்பின்67 வது தினம் நடந்தது. இதில் மத்திய அமைச்சர் சந்தோஷ் கங்வார் கலந்து கொண்டார். அப்போதுஇ.பி.எப்.ஒ. இணையதளத்தில் இரண்டு புதிய வசதிகளை தொடங்கி வைத்தார். அதில் மாத சம்பளம் வாங்கும் தொழிலாளர்கள் இனி யு.ஏ.என். எண்ணுக்காக தாங்கள் பணியாற்றும் நிறுவனத்தில் விண்ணபித்து பெற தேவையில்லை.
யு.ஏ.என். எண்ணை தாங்களே உருவாக்கிக் கொள்ளலாம். மற்றொன்றாக ஓய்வூதியதாரர்கள் ஓய்வூதியம் தொடர்பான ஆவணங்களை பெற டிஜி லாக்கரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இந்த இரு வசதிகளும் இ.பி.எப்.ஓ.,இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...