நீர் சேமிப்பின் அவசியத்தை உணர்த்தும் வகையில்,
மாணவர்கள் தினமும், 1 லிட்டர் நீரை சேமிக்க வேண்டும் என, சி.பி.எஸ்.இ.,
அறிவுறுத்தி உள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,
சார்பில், 90ம் ஆண்டு விழா, டில்லியில் நடந்தது.
இதில், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், புதியதிட்டங்களை அமல்படுத்துவது, கல்வி தரத்தை முன்னேற்றுவது, தேர்வு முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து, விரிவாக விவாதிக்கப்பட்டது. சி.பி.எஸ்.இ., தலைவர் அனிதா கர்வால் தலைமையில், கருத்தரங்கம் நடந்தது.இதையடுத்து, பல்வேறு முக்கிய முடிவுகள் மேற்கொள்ளப்பட்டு அவை பள்ளிகளுக்கு சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டு உள்ளன. அனைத்து பள்ளிகளிலும், நீர் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில், மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.ஒவ்வொரு மாணவரும், பள்ளியிலும், வீட்டிலுமாக வீணாகும் நீரை கட்டுப்படுத்தி, தினமும், 1 லிட்டராவது சேமிக்க வேண்டும்.
தண்ணீர் குறித்த ஆய்வுகளை பள்ளிகளில் அதிகப்படுத்த வேண்டும். சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தண்ணீர் சிக்கனத்தை மேற்கொள்ள வேண்டும் என, சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.மாணவர்களுக்கு, கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுக்கான பயிற்சிகளை வழங்க வேண்டும்; மாணவர்களின் கணித திறனை மேம்படுத்த வேண்டும்; செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப திறனை மாணவர்களிடம் வளர்க்க வேண்டும் என்றும், இந்த கருத்தரங்கில் முடிவுசெய்யப்பட்டது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...