கழிவறை பயன்பாடானது
நம் சுகாதாரம்
நாட்டின் சுகாதாரம்
நம் கண்ணியம்
நம் உரிமை
தேசிய நூலக வார விழாவை முன்னிட்டு திருச்சி, புத்தூர் கிளை நூலக வாசகர் வட்டம் தென்னூர் நடுநிலைப்பள்ளியில் நம் சுகாதாரம்,
நாட்டின் தூய்மை ,
நம் கண்ணியம்,
நம் உரிமை காக்க கழிவறையைப் பயன்படுத்துவோம் விழிப்புணர்வு நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.
பள்ளி மாணவ, மாணவிகள் அஞ்சலட்டை மூலம் கடிதம் எழுதி இல்லத்திற்கு அனுப்பி உற்றார், உறவினருக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர். நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் கருணாகரன், நூலகர் தேவகி உள்ளிட்டோர் தலைமை வகித்தார்கள் . வாசகர் வட்ட தலைவரும் சமூக ஆர்வலருமான யோகா ஆசிரியர் விஜயகுமார் பேசுகையில்,
ஐக்கிய நாடுகள் சபை நவம்பர் 19 உலக கழிப்பறை தினமாக 2013-ஆம் ஆண்டு அறிவித்தது.
திறந்தவெளியில் மலம் கழிப்பது மனித ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் பாதிக்கிறது. அது மட்டுமல்லாமல் கண்ணியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. திறந்தவெளியில் பெண்கள் மற்றும் இளம்பெண்களுக்கு திறந்தவெளியில் மலம் கழிப்பது அவமானத்தையும் தனியுரிமையையும் இழக்க நேரிடும். தனியுரிமையின் சில ஊர்களில் பெண்கள் பலர் தங்கள் சிறுநீர்ப்பை மற்றும் குடல்களை நாள் முழுவதும் அடக்கி வைத்திருப்பார்கள். இரவு நேரத்திற்குப் பிறகுதான் தங்கள் மலகசடுகளை விடுவித்துக் கொள்கிறார்கள். அவர்களின் சிறுநீர் மற்றும் மலம் வைத்திருப்பது சிறுநீர்ப்பை மற்றும் குடல் தொற்றுநோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
ரயில் தண்டவாளங்கள் ஓரங்களில் மலம் கழிப்பவர்கள் ஆற்றோரங்களில் மலம் கழிப்பவர்கள் என்று திறந்த வெளியில் மலம் கழிப்போர் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. அதுமட்டுமின்றி தொலைதூர பயணம் மேற்கொள்பவர்கள் பேருந்து நிறுத்தப்படும் இடத்தில் தான் கழிவறைக்குச் செல்ல முடியும். கழிவறை பராமரிப்பின்றி இருக்கக் கூடிய சூழலில் திறந்தவெளியினை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றார்கள். கர்ப்பிணிப் பெண்களும், மாதவிடாய் நேரங்களில் உள்ள பெண்களும் பராமரிப்பின்றி உள்ள கழிப்பறைகளை பயன்படுத்தும் போது பெறும் சங்கடத்திற்கு ஆளாகிறார்கள். அதுமட்டுமின்றி நோய் தொற்றுக்கும் ஆளாகிறார்கள். திறந்தவெளியில் மலம் கழிப்பதால் மலத்தில் உள்ள கிருமிகள் காற்று, நீர் ஆகியவை மூலமாக பல்வேறு வழிகளில் மனிதர்களுக்கு நோய் பரவுகிறது. மேலும், ஆற்றோரம் மலம் கழிப்பதால் நீர்நிலைகளையும் மாசு படுத்துகிறார்கள். பிரதமர் மோடியால் தூய்மை இந்தியா திட்டம் துவங்கப்பட்டு நிர்மல் பாரத் அபியான் திட்டத்தின்படி சுகாதார வசதிகளை ஏற்படுத்தி திறந்தவெளி மலம் கழித்தலை ஒழிக்க அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது . பொதுமக்கள் ஒவ்வொருவரும் தூய்மைப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றார். ஜெயலெட்சுமி நிகழ்ச்சியினை தொகுத்தளிக்க,
வாசகர் வட்ட தலைவரும் சமூக ஆர்வலருமான யோகா ஆசிரியர் விஜயகுமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை செய்து இருந்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...