எண்ணுார் அனல் மின் நிலையம், சென்னை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில்,
சமீபத்தில் நடந்த அறிவியல் கண்காட்சியில், கண்டுபிடிப்புகள் மற்றும்
அறிவியல் விதிகளை விளக்கி காண்பித்து, மாணவர்கள் அசத்தினர்.கற்பித்தல்
முறையில், பள்ளி ஆசிரியர்கள் செயல்முறை கற்பித்தல் புகுத்தியிருப்பது,
மாணவர்களின் செயல்முறை விளக்கங்கள், நமக்கு உணர்த்தின.மூன்றாம் வகுப்பு
மாணவி சுருதிலா, ஆரஞ்சு பழம், தோலுடன் தண்ணீரில் மிதக்கும் நிலையில், தோல்
இன்றி தண்ணீர் மூழ்கும் பரிசோதனையை தெளிவாக விளக்கினார்.ஐந்தாம் வகுப்பு
மாணவர், கிருத்திகேஷ், கடிகாரங்களில் பொருத்தும் பேட்டரிகளை வைத்து,
சுழலும் சிறிய அளவிலான மின்விசிறியை பார்வைக்கு வைத்து, அதை தயாரித்த விதம்
குறித்து கூறினார்.மற்றொரு மாணவர் விஸ்வா, இவருக்கு ஒரு படி மேலே,
பேட்டரியில் இயங்கும் மின்விசிறியின் காற்றில், தெர்மாகோலில் செய்யப்பட்ட
படகு, தண்ணீரில் பயணிக்கும் சோதனையை, செயல்முறை
விளக்கமளித்தார்.கட்டுப்பாடற்ற உணவு முறைகளால், ஏற்படும் அபாயம் குறித்து
விளக்கிய மாணவர் ஸ்ரீநிதீஷ், உணவு கோபுரம் அமைத்து, வேளைகளில் உண்ண வேண்டிய
உணவு பட்டியலை, மழலை மொழியில் விவரித்தார்.முடிந்தது என, கிளம்ப தயாரான
நம்மை நோக்கி, நான்காம் வகுப்பு மாணவி மலர்வாணி, தான் செய்த முயற்சியை
பார்த்து, விளக்கம் கேட்கவில்லை என, குரல் எழுப்பினார்.அவரருகே சென்று
கேட்டபோது, வாட்டர் கேனின் அடிபாகத்தில், பல துளைகள்
ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதில், தண்ணீர் நிரப்பினால், துளை வழியாக தண்ணீர்
வேகமாக வெளியேறும்.பின், வாட்டர் கேனின் மேல் மூடியை மூடினால், காற்றின்
அழுத்தத்தால், தண்ணீர் வெளியேறுவது நின்று விடும் என, கனீர் குரலில்
விவரித்தார்.வெறும், 30 மாணவர்களுடன் இயங்கும் இந்த தொடக்கப் பள்ளியில்,
மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை பலரும் பாராட்டினர்இதில், பள்ளி தலைமை
ஆசிரியை கவிதா, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் என, பலரும் பங்கேற்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...