சென்னை : குழந்தைகள் தினத்திலாவது இரவு ஒரு மணி நேரம், போனுக்கு லீவு
கொடுத்து, உங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள் என்ற, பள்ளிக்கல்வி
இயக்குனரின் அறிவுரை, பெற்றோர், கல்வியாளர்கள் மத்தியில், பெரும் வரவேற்பை
பெற்றுள்ளது.
டிஜிட்டல் யுகத்தில், ஆறாம் விரலாய் மாறிவிட்ட, ஸ்மார்ட் போனால், குடும்ப
உறவுகளுக்கான நெருக்கம் குறைந்து கொண்டே வருகிறது. பேஸ்புக்கில் நண்பர்களை
தேடுவோர், வீட்டிலிருப்போரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க நேரம்
செலவிடுவதில்லை. இதனால், நேரடியாக பாதிக்கப்படுவது குழந்தைகளே.
சிறந்த பள்ளி, சிறந்த டியூஷன் என மெனக்கெடும் பலரும், அவர்களின் எண்ணங்களை
தெரிந்து கொள்ள, நேரத்தை செலவிட முன்வருவதில்லை. இதனால், எல்.கே.ஜி.,
படிக்கும் குழந்தைகள் கூட, மன அழுத்தத்துடன் இருப்பதாக, கல்வியாளர்கள்
தெரிவிக்கின்றனர். இச்சிக்கலுக்கு தீர்வு காணும் வகையில், கல்வித்துறை புது
முயற்சி எடுத்துள்ளது. வரும் 14ம் தேதி, குழந்தைகள் தினத்தையொட்டி,
பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
இச்சுற்றறிக்கையில், 'பெற்றோர்களே....குழந்தைகள் தினத்தன்று, இரவு 7:30
முதல் 8:30 மணி வரை, பெற்றோர் போன்களை 'ஆப்' செய்து விட்டு, குழந்தைகளோடு
நேரத்தை செலவிடுங்கள். இது, குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள உதவும்.
றந்த தலைமுறை உருவாக்குவது, பெற்றோரின் கடமை என்பதால், இவ்வழக்கத்தை
வாரம், மாதம் என தொடர்ந்து பின்பற்றலாம். இந்த ஒரு மணி நேரத்தில், எந்த
மின்சாதனங்களையும் பயன்படுத்த வேண்டாம்.
இதை பின்பற்றுவோர், www.gadgetfreehour.com என்ற இணையதளத்தை பார்வையிட்டு,
கூடுதல் தகவல்களை பெறலாம்' என கூறியுள்ளார். இந்த அறிவுரை, கல்வியாளர்கள்,
பெற்றோர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...