மத்திய அரசு வேலை, மாநில அரசு வேலை, பொதுத்துறை நிறுவனம் மற்றும் வங்கி வேலை என அரசாங்கத்திற்கு உட்பட்டு ஆண்டுதோறும் காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியானலும், மத்திய அரசு சார்ந்த துறைகளில் காலியாக உள்ள வேலைகளுக்கு விண்ணப்பிக்கவோ, அதனை எதிர்கொள்வதற்கு தயங்கிக்கொண்டு விண்ணப்பிக்காமல் மாநில அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்புக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை சமீப காலமாக அதிகரித்துக்கொண்டு வருகிறது. இதற்கு ஒழுங்கான தேர்வு தயார் நிலையை கடைப்பிடிக்காததே காரணம் என்று கூறலாம். வேலைக்கான போட்டித் தேர்வுகளுக்கான போட்டிகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், கல்வித்துறையில் 5, 8 ஆம் வகுப்புகளுக்கே பொதுத்தேர்வுகள், கட்டாய மதிப்பெண் என்ற அறிவிப்பு குழந்தைகளையும், பெற்றோர்களையும் அச்சுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், லட்சக்கணக்கான பட்டதாரிகள் அரசு வேலைக்கான அறிவிப்புக்காக காத்துக்கிடக்கும் நிலையில், மத்திய, மாநில அரசுகள் 1,2,3,4 இலக்க எண்ணிக்கையிலான பணியிடங்களுக்கான அறிவிப்பை தொடர்ந்து வெளியிட்டு வரும் நிலையில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை வளர்ச்சி துறையில் தமிழக முழுவதும் காலியாக உள்ள ஊராட்சி செயலா், ஓட்டுநர், காவலர், ஆவண எழுத்தர் மற்றும் அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பினை தமிழக இளைஞர்கள் தங்களுக்கான வாய்ப்பாக கருதி, உரிய காலத்திற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதளமான www.ncs.gov.in அல்லது தமிழக ஊரக வளர்ச்சி துறையின் www.tnrd.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது அந்தந்த மாவட்டத்தின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை தேர்வு செய்ய வேண்டும்.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
* பின்பு அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கவனமாக படித்து அறிவிக்கப்பட்டுள்ள காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தாங்கள் தகுதியுடையவர்கள் என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும்.
* தகுதி வாய்ந்தவர்கள் மேற்கண்ட இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து விண்ணப்ப படிவத்தில் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைக்கான ஆதார சான்றிதழ்களை கண்டிப்பாக இணைத்து பரிந்துரைக்கப்பட்ட அஞ்சல் முகரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
* விண்ணப்பிப்போர். ஒவ்வொரு கிராம ஊராட்சிப் பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.
* ஒரே விண்ணப்பித்தின் மூலம் ஒன்றிற்கு மேற்பட்ட காலியிடங்களுக்கு விண்ணப்பித்திருந்தால் அவ்விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.
* விண்ணப்பதாரர்கள் காலியிடம் அறிவிக்கப்பட்ட ஊராட்சிப் பகுதிக்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.
* தகுதியான விண்ணப்பத்தாரர் சம்மந்தப்பட்ட ஊராட்சியில் இல்லாவிட்டால் அவ்வூராட்சியின் எல்லையை ஒட்டிய ஊராட்சியிலிருந்து விண்ணப்பிக்கும் தகுதி வாய்ந்த நபர்கள் பரிசீலனை செய்யப்படுவர்.
* அரசு விதிகளின்படி இன சுழற்சி முறை பினபற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு 2017 திருத்திய ஊதியக்குழு விதிகள் கீழ் ஊதியம் அட்டவணை படி ரூ.15,900-50,400, குறைந்பட்சம் ரூ.15,900 மற்றும் அனுமதிக்கப்பட்ட படிகள் வழங்கப்படும்.
* பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் தொடர்புடைய ஊராட்சி ஒன்றியத்தின் தனி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் அவர்களிடம் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ வரும் 25.11.2019 அன்று பிற்பகல் 5.45 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். காலம் கடந்து வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
*விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்முகத் தேர்வு கடிதம் அனுப்பி வைக்கப்படும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...