மாலத்தீவு பகுதிகளில், நாளை சூறாவளி காற்று வீசும். எனவே, மீனவர்கள் இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என, வானிலை மையம் எச்சரித்துள்ளது.
வரம் நாட்களுக்கான வானிலை நிலவரம் குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் கூறியதாவது:தமிழக கடற்பகுதியை ஒட்டி நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தமிழகம், புதுச்சேரியில், பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்யும்.
கடலுார், நாகை, தஞ்சாவூர், திருவாரூர், அரியலுார், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி மற்றும் துாத்துக்குடி மாவட்டங்களில், இன்று சில இடங்களில் கன மழையும், சில இடங்களில் மிக கன மழையும் பெய்யும்.
நாளையும், நாளை மறுநாளும், தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள்மாவட்டங்களில், பெரும்பாலான இடங்களில், மிதமான மழை பெய்யும்; சில இடங்களில் கன மழையும், ஓரிரு இடங்களில், மிக கன மழையும் பெய்யலாம்.
சென்னையில் இன்று, மிதமானது முதல், கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...