இன்று நவம்பர் 14ம் தேதி நாடு முழுவதும் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதையொட்டி, தமிழகத்தில் பெற்றோர்கள் அனைவரும் தங்களது செல்போன்கள் உள்ளிட்ட சாதனங்களுக்கு விடுமுறை கொடுத்து விட்டு, குழந்தைகளோடு ஒரு மணிநேரம் செலவிடவேண்டும் என்று தமிழக அரசின் கல்வி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
நவம்பர் 14 நாங்கள் செல்போனில் நேரத்தை செலவிடப் போறதில்லை.
நான் அப்பா, அம்மா மூன்று பேரும் பேசப் போகிறோம்,'' என்கிறான் சிறுவன் ஷாஸ்வத். தமிழக அரசு ஏற்படுத்தி வரும் இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் நல்ல பலனைக் கொடுக்கத் துவங்கியுள்ளது. இன்று பெரும்பாலான பள்ளிகளில் குழந்தைகள் தினம் குறித்து வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்ட மாணவர்களுக்கு ஆசிரியர்கள், நாளைய தினம் செல்போன் பயன்படுத்தாமல் உங்கள் பெற்றோருடன் மனம் ஒன்றி பேசி நேரத்தை செலவிடுங்கள் என்று அறிவுறுத்தியதாக தெரிய வருகிறது. தமிழக அரசு சொல்லும் ஒரு மணி நேரத்தை தொடக்கமாக கொண்டு பெற்றோர் தினமும் தங்களது குழந்தைகளுக்காக, அவர்களுடன் நேரத்தை செலவிடவேண்டும் என ஆசிரியர்கள் பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்
தங்களது பிள்ளைகள் தேர்வில் அதிக மதிப்பெண்களைக் குவிக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர், அவர்களுடன் நேரத்தை செலவிட முயல்வதில்லை. அனைத்துப் பாடங்களுக்கும் ட்யூசன் வகுப்புகள் என்று தனித்தனியே அனுப்பி வைப்பதையே கெளரமாக கருதுகின்றனர் என்கிற குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார் ஒரு ஆசிரியை
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...