அங்கீகாரம் இல்லாமல் செயல் படும் பள்ளிகள் மூடப்படும்
என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இயங்கும் தனியார்
பள்ளிகள் முறைப் படி அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.
கடந்த 10 ஆண் டுகளாகதமிழகத்தில் தனியார் பள்ளிகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, அங் கீகாரம், கட்டணம், அடிப் படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆய் வுக்கு எடுத்துக் கொள்ளப் பட்டு வருகிறது.
இதனால் பல பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் இயங்கி வருவதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்படி அந்த பள்ளி கள் முறையாக அங்கீகா ரம் புதுப்பிக்க வேண்டும் என்று மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்ககம் உத்தர விட்டுள்ளது.மேலும், கடந்த 2009ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள அம் சங்களின் அடிப்படையில் ஒவ்வொரு தனியார் பள்ளி யும்அரசு அங்கீகாரம் பெற் றிருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இதன் பேரில் அங்கீகாரம் இல்லாத பள்ளிகளை மூட வேண்டும் என்ற முடிவுக்கு தமிழகபள்ளிக்கல்வித்துறை வந்துள்ளது.இதையடுத்து , சென்னை உள்ளிட்ட அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள் அதற்கான உத்தரவுகளை வெளியிட் டுள்ளனர். சென்னை மாவட்ட கல்வி அதிகாரி வெளியிட் டுள்ள உத்தரவில்கூறப்பட் டுள்ளதாவது: | கட்டாய கல்வி உரி மைச் சட்டத்தின்படி பள் ளிகள் ஏதும் அங்கீகாரம் இல்லாமல் செயல்படக்கூ டாது.
அதேபோல துறை அனுமதி இல்லாமல் பள்ளி கள் செயல்படுவதும் விதிக ளுக்கு முரணானது. அப்படி செயல்பட்டால் அபராதம் விதிக்கப்பட்டு அதன்பிற கும் பள்ளிகள் செயல்பட் டால் நாள் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க விதியில் இடம் உள்ளது.அதனால் இதுவரையில் அங்கீகாரம் பெறாதவர்கள் இருந்தால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என இறுதி ஆணை பிறப்பிக்கப்படு கிறது. இது தொடர்பாக கருத்துருக்களை பள்ளிகள் அனுப்பவில்லை என்றால் விதிகளை பின்பற்றி சட்ட ரீதியாக பள்ளியை மூட நடவடிக்கைஎடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...