Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மண்ணுளிபாம்பு மர்மம் - தெரியுமா?



மண்ணுளி பாம்பு நம்மை நக்கினால் அல்லது கடித்தால் நமக்கு கை, காலில் குஷ்டம் நோய் வரும் என கிராம மக்களால் நம்பப்பட்டது. இது உண்மை அல்ல. இப்படி ஒரு பயம் இருந்தால் தான் நமது மக்கள் அந்த பாம்பினை தொட மாட்டார்கள் என்பதற்காக நமது முன்னோர்கள் காரணத்துடன் சொல்லி வைத்த பொய் அதுவாகும்.

#SANDBOA என ஆங்கிலத்தில் அழைக்கப் படும் மண்ணுளி பாம்புகள் தற்போது இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நிலங்களில் மட்டுமே வாழும் சூழ்நிலை உள்ளன.  

இவை பாம்பு இனமா என்று பார்த்தால், அது பாம்பே அல்ல, அது மண்புழு குடும்பத்தை சேர்ந்த ஒரு பெரிய அளவிலான புழு மட்டுமே. மண்ணில் வாழும் இது பாம்பு அல்ல என்கிறது அறிவியல். எனவே இனிமேல் மண்ணுளி புழு என்றழைப்போம். 

இந்த மண்ணுளி மிகுந்த கூச்ச சுபாவம் மற்றும் பயந்த சுபாவம் கொண்டதாகும். இந்த பாம்பினால் மரணம் நிகழ்ந்ததாக இதுவரை எந்த பதிவும் இல்லை. 

திடீரென இந்த பாம்புகளை லட்சக் கணக்கில் விலை கொடுத்து வாங்கும் அளவுக்கு என்ன அவசியம் வந்தது? 

இந்தக் கேள்விக்கான பதில் எங்கும் கிடைக்காது.  ஏனெனில் இதற்கான உண்மையான பதில் திட்டமிட்டு மறைக்கப் படுகிறது என்பது தான் உண்மை.  

மண்ணுளியின் உடம்பில் உள்ள வெள்ளை அணுக்கள் மனிதருக்கு பயன்படும், கேன்சர், எச்.ஐ.விக்கு மருந்தாகப் பயன்படும் என்பவை அனைத்தும் கட்டுக் கதையே. 

இந்தியாவின், குறிப்பாக தமிழர்களின் அடையாளமான இயற்கை விவசாயத்தை அழிப்பு முயற்சியான ஒரு அறிவியல் யுத்தம் (BIO WAR)  என்பது தான் உண்மை. 

மண்ணை உண்டு மண்ணிலேயே கழிவு செய்யும் மண்ணுளி புழு ஒரு இயற்கை உர உற்பத்திப் தொழிற்சாலை. இது இடும் எச்சம் வீரியமான இயற்கை உரம். ஒரு நிலத்தில் ஒரு மண்ணுளி புழு இருந்தால் அந்த இடத்தை சுற்றிலும் பல ஏக்கர்களுக்கு போதுமான இயற்கை உர சக்தியினை ஒரு மண்ணுளி புழுவால் உற்பத்தி செய்யப்படும். 

இந்த மண்ணுளி புழுக்கள் மணற்பாங்கான இடங்களையே விரும்பி வாழும். இவை மண்ணில் சுவாசிப்பதன் மூலம் மண்ணின் காற்று உள்புகும் திறனும் அதிகரித்து ஆக்சிஜனும் நைட்ரஜனும் இயற்கையாகவே  மண்ணுக்கு ஏற்றப்படுகிறது. 

எந்த காலக்கட்டத்திலும் இயற்கை விவசாயம் தலைத்தோங்கி நிற்க காரணம் என்ன, இவர்களின் இயற்கை விவசாயத்தினை அழிப்பது எப்படி,  நமது செயற்கை உர சந்தையை இவர்களிடம் அதி்கப்படுத்துவது எப்படி என்ற வியாபார புத்தியில் உதித்த உத்தி தான் மண்ணுளி புழு வியாபாரம். 

ஒருவனை ஏமாற்ற வேண்டுமெனில் அவனது ஆசையை தூண்ட வேண்டும் என்ற தந்திரம் தான். மண்ணுளி புழுவினை விலைக்கு வாங்குபவர்கள் சொல்லும் நிபந்தனைகள் தெரியுமா? காயம் இருக்கக் கூடாது, 3 முதல் 5 கிலோ இருக்க வேண்டும்,  என்பார்கள். காயம் இருக்கக் கூடாது எனும் நிபந்தனையின் படி பார்த்தால், அவைகளை பிடிக்கும் முயற்சியில் பெரும்பாலான மண்ணுளிக்கள் காயப்பட்டு விடும். காயம்பட்ட மண்ணுளிகளை நிராகரித்து விடுவார்கள், நாமும் ஓரத்தில் தூக்கி எரித்து விடுவோம். இவைகளுக்கு தப்பிய மண்ணுளிக்கள் தான் எடை அளவுக்கு போகும். அங்கு அனைத்தும் நிராகரிக்கப் படும். ஏனெனில் அவர்கள் நிபந்தனையின் படி 3 முதல் 5 கிலோ எடை இருக்க வேண்டும். ஆனால் உண்மை என்னவெனில் இந்த மண்ணுளி புழுக்கள் சராசரியாக 1 கிலோ அல்லது 1 1/2 கிலோ அளவு தான் இருக்கும். அப்படியான சூழ்நிலைகளில் எடை குறைவாக உள்ளது. அடைத்து வைத்து வளர்த்து வாருங்கள் என்பார்கள். நம்ம மக்கள் அதனை ஒரு தொட்டியிலோ அல்லது ட்ரம்மிலோ போட்டு அடைத்து வைத்து அதன் இயல்பான அசைவுகளை தடுத்து விடுகிறோம். 

இதன் விளைவு! மண்ணுளி புழு மண்னுக்கு அளிக்கும் இயற்கை உரம் தடுத்து நிறுத்தப் படுகிறது. முன்னர் சொன்னது போல பயந்த சுபாவம் கொண்ட இந்த மண்ணுளி புழுக்கள் அடைத்து வைக்கப்பட்ட தொட்டியில் இரண்டு அல்லது மூன்று தினங்களில் இறந்து போகும். 

இவ்வாறாக நம் மக்களுக்கு தூண்டப்பட்ட ஆசையில் உழவர்களின் நண்பனான மண்ணுளிக்கள் தற்போது பெரும்பாலும் அழிக்கப்பட்டு வருகின்றன. 

விளைவு: #இயற்கை_விவசாயம்_அழிவுப்பாதையில்_நாம்_செயற்கை_உரத்தினைத்_தேடும்_நிர்பந்தம். 

இப்போது முதல் பாராவினை திரும்ப படியுங்கள். நம் முன்னோர்கள் லெஜெண்ட் என்பது புரியும்.

 நன்றி...




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive