Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

உடல் உறுப்பு தானத்திற்கு அழைப்பிதழ் அச்சடித்து விழிப்புணர்வை ஏற்படுத்திய திருச்சி தம்பதியினர்


உடல் உறுப்பு தானம் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் நவம்பர் 27ஆம் தேதி இந்திய உடல் உறுப்பு தான தினமாக கடைபிடிக்கப்படுகிறது. மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்பு தானம் செய்த ஹிதேந்திரனின் செயல்பாட்டுக்கு பின்னரே தமிழகத்தில் விழிப்புணர்வு அதிகரித்தது. உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது. விபத்து மற்றும் பல்வேறு காரணங்களால் மூளை நிரந்தரமாக செயல் இழந்து மற்ற உறுப்புகள் செயல்படும் நிலை மூளைச்சாவு எனப்படுகிறது. மருத்துவ ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் மூளைச் சாவு என்பது இறப்புக்கு இணையாக கருதப்படுகிறது. இந்நிலையில் திருச்சி, புத்தூர், அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை சார்பாக உடல் உறுப்பு தான விழிப்புணர்வு நிகழ்ச்சியினை நடத்தினார்கள்.
உடல் உறுப்பு தானத்திற்கு நூதன முறையில் அழைப்பிதழ் அச்சிட்டு வழங்கினார்கள். அழைப்பிதழில் அன்புடையீர்,
 வணக்கம் . ஒருவர் உடல் நலமின்றியோ, விபத்திலோ, தீவிர சிகிச்சை பிரிவில் மூளை, மூளை தண்டு செயலிலிருந்து பிற உடல் உறுப்புகள் இயந்திர உதவியில் செயல்படுமானால் அவர் மூளைச்சாவு அடைந்தவராவார். மூளைச்சாவு அடைந்தவரை அனுபவம் வாய்ந்த மூளை நரம்பியல் மருத்துவர்கள் 6 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை ஆய்வு செய்து மூளைச்சாவு சான்றிதழ் வழங்குவார்கள். ஏதோ ஒரு காரணத்தால் மூளைச்சாவடைந்த நோயாளிகளுக்கு செயற்கை சுவாசத்தை உயிர்ப்புடன் இதயத்துடன் வைக்கப்படுகிறது. செயற்கை சுவாசத்தை அகற்றிய உடன் அவர்கள் இறந்து விடுகிறார்கள். எனவே இவர்களின் நெருங்கிய உறவினர்கள் ஒப்புதலோடு பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவைப்படும் உறுப்புகளை பொருத்தி உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் உயிர் காக்கலாம். நம் வாழ்நாளிற்கு பிறகு புதைக்கவோ, எரிக்கவோ கூடிய உடலில் இருந்து பெறப்படும் உறுப்புகளால், உறுப்புகள் பழுதடைந்து உயிருக்கு போராடுபவரைக் காப்பாற்ற முடியும். அவர்களுக்கு மனித சமுதாயத்திற்கு சேவை செய்யும் மனப்பான்மையுடன் மருத்துவ தேவைக்காக உடல் உறுப்பு தானம் செய்வோர் என்கிற வரனும்,
 உடல் உறுப்புகள் பாதிப்படைந்து செயல் இழந்து உடல் உறுப்பு தேவைப்படுவோர் என்கிற வரனும்  இணைந்து உயிர்களை காப்பாற்ற இருக்கின்றனர். உறுப்பு தானம் வழங்க விரும்பும் நாட்டின் நலன் காக்கும் அறிஞர்களும், பொதுமக்களும், மகளிர்களும், இளைஞர்களும், திருநங்கைகளும், கல்லூரி தோழர்களும், தோழியரும் மற்றும் சுற்றமும், நட்பும் சூழ அவர் தம் வாழ்நாளிற்கு பிறகு, உடல் உறுப்பினை தானமாக அளிப்பதாக உறுதியேற்று தன் குடும்பத்தாரிடம் தன் சுய விருப்பப்படி, சட்டத்திற்குட்பட்டு எழுத்துப்பூர்வமாக அதிகாரம் அளிப்போம். எனக்கு உள்ளார்கள் உடல் உறுப்பு தானத்தை இந்திய அரசு 1994 சட்டம் இயற்றி அங்கீகரித்துள்ளது. அதில் மூளைச்சாவு ஏற்பட்டவர்களிடமிருந்து இதயம் ,கணையம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், சிறு குடல் ,நரம்புகள், எலும்புகள், கண்கள் என 25க்கும் மேற்பட்ட உறுப்புகளை பெற சட்டம் அனுமதிக்கிறது என அச்சிடப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள். வழக்கறிஞர் சித்ரா விஜயகுமார் யோகா சீரியல் விஜயகுமார் தம்பதியினர்.

உடலிலுள்ள உறுப்புக்களை
சிறு நீரகம் - 72 மணி நேரம் வரை,
கல்லீரல் - 18 மணி நேரம் வரை,
இதயம் - 5 மணி நேரம் வரை,
இதயம் / நுரையீரல் - 5 மணி நேரம் வரை,
கணையம் - 20 மணி நேரம் வரை,
கண் விழித்திரை (கார்னியா) - 10 நாட்கள் வரை,
எலும்பு மஜ்ஜை - கால அளவு மாறும்,
தோல் - 5 வருடம், அதற்கு மேலும்,
எலும்பு - 5 வருடம், அதற்கு மேலும்,
இதயத்தின் வால்வுகள் - 5 வருடம் பொதுவாக, பாதுகாத்து வைத்து உபயோகப்படுத்தலாம் என கூறப்படுகிறது.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive