தொலைத்தொடர்பு சேவையில் நஷ்டம் அதிகரிப்பதாக கூறப்படுவதால் இந்தியாவில் இருந்து வோடபோன் நிறுவனம் வெளியேறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இங்கிலாந்தை தலைமை இடமாக கொண்டு இயங்கும் வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனம் இந்தியாவில் தனித்து இயங்கிய நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஐடியா நிறுவனத்துடன் இணைந்து வோடபோன்-ஐடியா என்ற பெயரில் சேவையை வழங்கி வருகிறது. தொடர்ந்து நிகழ் நிதியாண்டின், முதல் இரண்டு காலாண்டுகளாக தலா 4 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவிற்கு இழப்பை எதிர்க் கொண்டிருக்கிறது. மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய தொலைத்தொடர்பு கட்டணத்தில் 28 ஆயிரத்து 306 கோடி ரூபாயை நிலுவையாக வைத்துள்ளது.
ஏற்கனவே ஜியோ வருகையால் நட்டத்தை எதிர்கொண்டதாக கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்த நெருக்கடியான நிதிசூழலால் வேடபோன் நிறுவனத்தின் நஷ்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வோடபோன் நிறுவனம் தனது இந்திய சேவையை நிறுத்தி கொண்டு நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என தொலைத்தொடர்பு வட்டார தகவல்கள் தெரிவித்திருக்கின்றன. இது தொடர்பாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் வோடபோன் - ஐடியா செய்தி தொடர்பாளர்களுக்கும் அதன் கார்ப்பரேட் கம்யூனிகேசன்ஸ் குழு தலைவர் பென் படோகன் ஆகியோரை இ-மெயில் மூலம் தொடர்பு கொண்டு கேள்வி எழுப்பியது. ஆனால் அதற்கு வோடபோன் - ஐடியா நிறுவனம் சார்பில் எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...