வனக்காவலர் பணிக்காக, அக்டோபர், 4ல் நடந்த, ஆன்லைன் தேர்வுகளின் முடிவுகள் வெளியிடப் பட்டுள்ளன.
தமிழகத்தில், 564 வனக்காவலர்களை தேர்வு செய்வதற்கான, ஆன்லைன் தேர்வுகள், அக்., 4ல் துவங்கி, 6ல் முடிந்தன. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த தேர்வுகளின் முடிவுகளுடன், 1:3 என்ற அடிப்படையில்,அடுத்த நடைமுறைக்கு தகுதியானவர்கள் பட்டியலை, வனத்துறைவெளியிட்டுள்ளது.இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்களுக்கு, சான்றிதழ் சரி பார்ப்பு, உடல் தகுதி சரி பார்த்தல் போன்றவை, கிண்டிதேசிய பூங்காவில் உள்ள சிறுவர் பூங்காவில் வரும், 24, 25ம் தேதிகளில் நடத்தப்படும். இறுதியாக, 26ல் உடல் திறன் தேர்வு, வண்டலுார் உயிரியல் பூங்கா வளாகத்தில் நடத்தப்படும் என, வனச்சீருடை பணியாளர் தேர்வு குழுமம் அறிவித்துள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...