சென்னை : நவம்பர் மாத பள்ளி வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த மாதம், 22 நாட்கள், பள்ளிகள் இயங்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக பள்ளி கல்வித்துறையில், ஒன்று முதல் ஐந்து வரை, ஆண்டுக்கு, 220 நாட்களும், மற்ற வகுப்புகளுக்கு, 210 நாட்களும் வேலை நாட்களாக உள்ளன. இதில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்று, ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகளுக்கு, 210 நாட்கள் தான் வேலை நாட்கள் என, அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்தார். இந்த, 210 நாட்களில், ஒவ்வொரு மாதமும் எத்தனை நாட்கள் பணியாற்ற வேண்டும் என, ஆண்டின் துவக்கத்தில் பள்ளி வேலை நாள் காலண்டர் வழங்கப்படும்.
இதன் அடிப்படையில், ஆசிரியர்கள், வேலை நாட்களை திட்டமிடுவர்.ஆனால், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிகள் திறக்கப்பட்டு, ஐந்து மாதங்கள் தாண்டி விட்ட போதும், இதுவரை வருடாந்திர பள்ளி காலண்டரை, பள்ளி கல்வித்துறை தயாரிக்கவில்லை. மாறாக தவணை முறையில், ஒவ்வொரு மாதமாக, வேலை நாட்கள் காலண்டர் வெளியிடப்படுகிறது. இந்த மாதத்துக்கான காலண்டர், நேற்று வெளியிடப்பட்டது. இந்த மாதம், 21 வேலை நாட்கள் என்றும், தீபாவளிக்கு விடப்பட்ட கூடுதல் விடுமுறையை சரிக்கட்டும் வகையில், நவம்பர், 9ல் வேலை பார்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த மாதத்தில், 22 நாட்கள் பள்ளிகள் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...