கொல்கத்தா சர்வதேச அறிவியல் திருவிழா 2019 ல் வெள்ளியணை அரசுப் பள்ளி இளம் விஞ்ஞானி மாணவர்கள் அறிவியல் ஆய்வுத் திட்டம் பதிவு
*மேற்கு வங்க தலை நகர் கொல்கத்தாவில்* சர்வதேச அறிவியல் திருவிழாவைப் *மாண்புமிகு பாரதப் பிரதமர் உயர்திரு .நரேந்திர மோடி ஐயா அவர்கள்* நவம்பர் 5 அன்று தொடங்கி வைத்து *மாணவர்களிடம் அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து எழுச்சியுறையாற்றினார்.*
*மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறையின் விஞ்ஞான் பாரதி சார்பில் நடத்தப்படும் இத்திருவிழாவில் மத்திய சுகாதாரம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மாண்புமிகு உயர்திரு . ஹர்ஷவர்தன் மற்றும் அனைத்து மாநில அறிவியல் தொழில்நுட்பத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.*
2015ம் ஆண்டில் இருந்து ஆண்டுதோறும் நடைபெற்று வரும் 5 ஆம் ஆண்டின் அறிவியல் திருவிழாவின் 2019ம் ஆண்டு கருப்பொருளாக ”* *அறிவியலில் ஆய்வு, புதிய கண்டுபிடிப்பு மூலம் நாட்டை பலப்படுத்துதல்*”* என்று அறிவிக்கப்பட்டு அது தொடர்பான *அறிவியல் கிராமம், இளம் விஞ்ஞானிகள் மாநாடு, விஞ்ஞானிகள் இலக்கியத் திருவிழா, வேளாண் விஞ்ஞானிகள் சந்திப்பு, அறிவியலில் சிறந்து விளங்குவோர்க்கான சந்திப்பு மற்றும் நேருக்கு நேர், அரசு சாரா அமைப்புகளின் கலந்தாய்வு , உட்பட 28 வெவ்வேறு நிகழ்வுகள்* இந்த திருவிழாவில் இடம்பெற்றன.
*நவம்பர் 5 முதல் 8 வரை நடைபெற்ற இத்திருவிழாவில் விஞ்ஞானிகள், விவசாயிகள், அறிவியலாளர்கள், பெண்கள், தொழில்முனைவோர், மாணவர்கள் மற்றும் உலக முழுவதும் இருந்து விஞ்ஞானிகள் பங்கேற்பு என 20, 700 பேர்* கலந்துக் கொண்டதில், *தமிழத்திலிருந்து , கரூர் பாராளுமன்றம் தொகுதி சார்பாக* கரூர் மாவட்டம், வெள்ளியணை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி 5 மாணவர்களுடன்,நான் (பெ.தனபால்) பங்கேற்று *வெள்ளியணை பஞ்சாயத்து மக்களுக்கு அடிப்படை தேவையான காவிரியிலிருந்து கடலில் கலக்கும் உபரி நீரை குழாய் மூலம் வெள்ளியணை குளத்திற்கு* எடுத்துவரும் *ஒரு இலட்சம் மக்களின் ஒருமித்த குரலை சர்வதேச அறிவியல் திருவிழாவில் கணித மேதை இராமானுஜம் இல்லத்தில் பதிவு எண் 14 ல் முதல் நிகழ்ச்சி வீடியோ பதிவாக வெள்ளியணை மாணவர்கள் ஆங்கிலத்தில் 10 நிமிடங்கள் பகிர்ந்ததை அரங்கம் கரவோசை எழுப்பி பாராட்டினார்கள்.*
*இராமானுஜம் இல்லம் :*
05 .11 .2019 நிகழ்வு :
காலை 10.00 - 11.30 மணி வரை பதிவு
11.30 - 1.00 மணி
*எளிய வேதியியல் செய்முறைகள்*
மதியம் : 2.00 - 4.00 *துவக்க விழா*
மாலை 6.00 - 7.00 *கலை நிகழ்ச்சிகள்.*
06.11.2019 நிகழ்வு :
காலை 10.00 - 1.00 மணி
*கணித செயல்பாடுகள் செய்முறை*
மதியம்: 2.00 - 5.00 *அறிவியல் நகரம் பார்வையிடல்*
6.00 - 7.30 - *கலை நிகழ்ச்சிகள்.*
07.11 .2019 நிகழ்வு :
காலை: 10.00 - 12.00 *இயற்பியல் பரிசோதனைகள்*
மதியம் : 1. 30 - 4.00 *விஞ்ஞானிகளுடன் உறையாடல்.*
இரவு : 6.30- 7.30 : *வான்நோக்குதல்*
08.11.2019 நிகழ்வு :
காலை : 10.00 - 12.30 *விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல்,*
மதியம்: 1.30 - 3.30- *போஸ்டர் பிரசன்டேசன்.*
3.30- 6.00 - *நிறைவு விழா .*
*நவம்பர் 5 முதல் 8 வரை நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் என 4 நாட்கள் 64 மணி நேரம் எங்கும் அறிவியல், எதிலும் அறிவியல் என மாணவர்கள் அறிவியல் திருவிழாவில் கலந்துக் கொண்டு அடிப்படை அறிவியலை கற்றதுடன் , இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்து வந்திருந்த மாணவர்களுடன் கலந்துரையாடி மகிழ்ந்தனர்.*
சர்வதேச அறிவியல் திருவிழாவிற்கு கரூர் பாராளுமன்றம் தொகுதி சார்பாக வெள்ளியணை, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியை தேர்வு செய்த *கரூர் பாராளுமன்ற மக்களவை உறுப்பினர் மாண்புமிகு செல்வி. எஸ். ஜோதிமணி அம்மா அவர்களுக்கும், பயண முன்பதிவு ஏற்பாடுகள் செய்த நேர்முக உதவியாளர் ஐயா அவர்களுக்கும், வழிகாட்டி ஊக்குவித்த தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற பரமத்தி, ஊ.ஓ.தொ.பள்ளி தலைமை ஆசிரியர் உயர்திரு .செல்வக்கண்ணன் ஐயா அவர்களுக்கும், சர்வதேச அறிவியல் திருவிழா தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் திரு. கண்ணபிரான் அவர்களுக்கும் , தமிழ்நாடு ,பள்ளிக் கல்வித்துறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம், மாவட்ட நிர்வாகம், கரூர் மாவட்டம் பள்ளிக்கல்வித் துறை, வாழ்த்தி வழியனுப்பிய வெள்ளியணை பஞ்சாயத்து ஊர் பொதுமக்கள் மற்றும் பள்ளி முன்னாள் மாணவர்கள், பள்ளி கட்டிடக் குழு, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி முன்னாள் மாணவர் சங்கம் , பத்திரிக்கை மற்றும் ஊடக துறை, கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், முகநூல்மற்றும் கட் செவி அன்பு சொந்தங்கள்* என அனைவருக்கும் பள்ளி சார்பாக என் மனமார்ந்த கோடான கோடி நன்றிகள்
*நீர் நிலைகள் மீட்போம்*!
*விவசாயம் காப்போம்.*!
கொல்கத்தாவிலிருந்து....
கனவு ஆசிரியர்
பெ.தனபால், பட்டதாரி ஆசிரியர் ,
*(சர்வதேச கலாம் கோல்டன் விருது பெற்றவர் )*
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி,
வெள்ளியணை,
கரூர் மாவட்டம் - 639 118,
தமிழ்நாடு, இந்தியா .
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...