Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

10th All Subjects - Slow Learners Portion

10th New Study Material ( New Books Based )




பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வுக்கு இன்னும் 147 நாட்கள் உள்ளன. அவற்றில் தேர்வு நாட்கள், விடுமுறை நாட்கள் போக தோராயமான பள்ளி வேலை நாட்கள் 80 நாட்கள் இருக்கலாம். மெல்ல கற்கும் மாணவர்களைத் தேர்ச்சியடைய வைக்க திட்டமிட்டு செயலாற்றினால் எல்லோரும் மகிழும் வகையில் தேர்ச்சி பெறலாம். எந்தெந்த மாணவர் எந்தெந்த பாடத்தில் அல்லது பாடங்களில் பின்தங்கியுள்ளனர் என அடையாளம் கண்டுகொள்ள வேண்டும்.

               இரண்டு நாட்களுக்கு ஒரு மதிப்பெண் பெரும் வகையில் திட்டமிட்டு செயலாற்ற வேண்டும். அவர்களை அதிகமாக படித்து வாருங்கள் என தொல்லை கொடுக்கக்கூடாது. ஒவ்வொரு பாடத்திலும் (தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், சமூக அறிவியல்) தினமும் பத்து மதிப்பெண்களுக்கு வினாக்கள் கொடுத்து படித்து வரச்செய்யலாம். தினமும் குறுந்தேர்வு நடத்தலாம். பத்து மதிப்பெண்களுக்கான வினாக்கள் ஒரு மதிப்பெண் வினாக்களாகவோ, இரு மதிப்பெண் வினாக்களாகவோ, மூன்று மதிப்பெண் வினாக்களாகவோ, நான்கு மதிப்பெண் வினாக்களாகவோ, ஐந்து மதிப்பெண் வினாக்களாகவோ, ஏழு அல்லது எட்டு மதிப்பெண் வினாக்களாகவோ  இருக்கலாம். வாய்ப்பிருந்தால் ஒரு மதிப்பெண் வினாக்களை ஆன் லைன் தேர்வாக நடத்தலாம். வினாத்தாளிலேயே விடை எழுதுவதுபோலவும் தேர்வு வைக்கலாம். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு. உழைப்பே வெற்றி தரும், உயர்வும் தரும், கேட்பன எல்லாம் தரும்.

               மெல்ல கற்கும் மாணவர்களைத் தேர்ச்சியடைய வைக்க பின்வரும் பகுதிகளில் மீண்டும் மீண்டும் பயிற்சி அளிக்கலாம். இப்பகுதிகளில் தங்கள் விருப்பப்படி சேர்த்தலோ நீக்கலோ செய்துகொள்ளலாம். கிராமத்தில் ஒரு சொற்றொடர் மிகப்பிரபலம். “நோகாமல் நோன்பு கும்பிடுவதுஎன்பதே அது. நாம் செய்யவிருப்பது அதுவே! குறைவாகப் படித்து மனநிறைவான மதிப்பெண்கள் எடுத்து மகிழலாம்; மகிழ்ச்சியடையச் செய்யலாம்.

               சில ஒரு மதிப்பெண் வினாக்களைச் சேர்த்து எழுதினால் குறு வினாவின் விடையும், சில குறு வினா விடைகளைச் சேர்த்து எழுதினால் சிறு வினாவின் விடையும், சில சிறு வினாக்களின் விடைகளைச் சேர்த்து எழுதினால் நெடு வினாவின் விடையும் அமையும் வகையில் (சிறிது மெனக்கட்டு) தயார் செய்துவிட்டால் பாதி வெற்றி அடைந்துவிடலாம். மனமிருந்தால் சிலர் உழைப்பை மற்றவர்களுக்கு உதவும் வகையில் பகிரலாம்.

               ஒரு மதிப்பெண் வினாக்கள், தமிழ் மற்றும் ஆங்கில மனப்பாடப் பாடல்கள், கலைச்சொற்கள், பகுபத உறுப்பிலக்கணம், இலக்கணக்குறிப்பு, அலகிடுதல், . . .  Poetic devices, Poetry appreciation, Abbreviations, Acronyms, etc., வாய்பாடு, 1 முதல் 10 வரை (மேலிருந்து கீழே 10 வரை) வாய்பாடு, வர்க்க வாய்பாடு, எளிய சூத்திரங்கள், . . . வேதிப்பொருட்களின் வாய்பாடு, சில செயல்களின் தொடர் நிகழ்வுகள், . . . காலக்கோட்டிற்கான நிகழ்வுகள், தலைப்பு வினாக்கள், வேறுபாடுகள், . . .  போன்றவற்றை அலைபேசியில் ஒலிப்பதிவு செய்து வகுப்பறைகளிலோ, ஒலிஒளிக் காட்சி அறைகளிலோ, கணினி அறைகளிலோ, ஸ்மார்ட் வகுப்பறைகளிலோ, அல்லது காலை, மதியம், மாலை இடைவேளை நேரங்களில் பள்ளி முழுமைக்குமோ ஒலிபரப்பு செய்தால் மாணவர்களுக்கு தானாகவே மனப்பாடம் ஆகிவிடும்


தமிழ்

வினா வகை                   மதிப்பெண்கள்      
ஒரு மதிப்பெண் வினாக்கள்              14     4
மனப்பாடப்பகுதி                            2 + 3 = 5     3
சொற்பெட்டி                                                     2
ஒரு சொல் ஒரு தொடர்                             2
கலைச் சொற்கள்                                         2       
நிறுத்தற்குறிகள்                                           2     3
(மொழியோடு விளையாடு, மொழியை ஆள்வோம்.)          
உரைநடைப் பத்திவினா விடை    3     3
படம்கருத்து எழுதுதல், கவிதை எழுதுதல்  5             3
படிவல் நிரப்புதல்                                         5     3
கடிதம்                                                                   5     3
செய்யுள் நெடுவினா                                 5     3
கட்டுரை                                                              8     3
உரைநடை நெடுவினா                             8     3
விரிவானம்                                                        8     2
பகுபத உறுப்பிலக்கணம்                      2     1
அலகிடுதல்                                                       5     3
அணி                                                                      5     3

மெல்ல கற்கும் மாணவன் பெறவுள்ள மதிப்பெண்                        40  
 




ENGLISH

Question Type                                                  Marks        
Multiple choice questions                              9
Poetry Appreciation                                         2                 
Road map                                                           2
Poetic devices                                                   3
Prose Paragraph                                               2                 
Poetry Paragraph                                             2                 
Comprehension                                                2
Advertisement                                                   3
Picture question                                               2
Note making & Summarizing                        3
Errors                                                                  2
Memory poem                                                  3
Supplementary paragraph                             3
Comprehension                                                2

Expected marks for late bloomers               40



கணக்கு

வினா வகை                                      மதிப்பெண்கள்                                    
ஒரு மதிப்பெண் வினாக்கள்                                                                           5
இரு மதிப்பெண் வினாக்கள்                                                                          5
சார்பு, கணங்கள்                                                   5
கூட்டுத்தொடர், பெருக்குத்தொடர்                                                            5
பகுமுறை வடிவியல்/அளவியல்                5                                               
மாறுபாட்டுக்கெழு / திட்டவிலக்கம் / நிகழ்தகவு                                                  5
செய்முறை வடிவியல்                                        5
வரைபடம் வரைதல்                                            5

மெல்ல கற்கும் மாணவன்
பெறவுள்ள மதிப்பெண்                                   40                      






அறிவியல்

வினா வகை                                      மதிப்பெண்கள்                                    
ஒரு மதிப்பெண் வினாக்கள்                                                                           5
இரு மதிப்பெண் வினாக்கள்                                                                          6
நான்கு மதிப்பெண் வினாக்கள்                                                                   8
ஏழு மதிப்பெண் வினாக்கள்                                                                           7

மெல்ல கற்கும் மாணவன் பெறவுள்ள மதிப்பெண்                        26

(இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றில் மிக எளிமையான சில பாடங்களில் மட்டும் பயிற்சி அளிக்கலாம்)




சமூக அறிவியல்

வினா வகை                                      மதிப்பெண்கள்                                    
ஒரு மதிப்பெண் வினாக்கள்                                                                           6
இரு மதிப்பெண் வினாக்கள்                                                                          6
ஐந்து மதிப்பெண் வினாக்கள்                                                                       20
(கோடிட்ட இடங்களை நிரப்புதல்,
பொருத்துக 1, பொருத்துக 2, வேறுபடுத்துக,
காலக்கோடு, உலக வரைபடம்)
தலைப்பு வினாக்கள்                                             4
இந்தியா / தமிழ்நாடு வரைபடம்                                                                  4

மெல்ல கற்கும் மாணவன் பெறவுள்ள மதிப்பெண்                        40








1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive