திருக்குறள்
அதிகாரம்:இன்னா செய்யாமை
திருக்குறள்:311
சிறப்பீனும் செல்வம் பெறினும் பிறர்க்குஇன்னா
செய்யாமை மாசற்றார் கோள்.
விளக்கம்:
சிறப்பைத் தரும் செல்வத்தைப் பெறுவதாக இருந்தாலும்கூட அடுத்தவர்க்குத் தீமை செய்யாதிருப்பது குற்றமற்றவரின் கொள்கையாகும்."l
பழமொழி
Casting no Pearls before swine
கழுதை அறியுமா கற்பூர வாசனை.
இரண்டொழுக்க பண்புகள்
1. மலருக்கு மணம் அவசியம் போல மனிதனுக்கு குணம் முக்கியம்.
2. எனவே மனிதரின் குணங்களை வைத்தே அவர்களை மதிப்பிடுவேன்.
பொன்மொழி
சிரிப்பு என்பது உலக ஜீவராசிகளில் மனிதனுக்கு மட்டுமே உள்ள சிறப்பு. இதை உணர்ந்து தேவைக்கேற்ப புன்னகை புரிதலே அதற்கு நாம் செய்யும் சிறப்பு ஆகும்.
-----நெல்லை கண்ணன்
பொது அறிவு
1. நொய்யல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற நகரம் எது ?
திருப்பூர்
2.பிப்ரவரி 29 அன்று பிறந்த இந்திய பிரதமர் யார்?
மொரார்ஜி தேசாய்
English words & meanings
Xylology – study of wood. மரக் கட்டைகள் மற்றும் அவற்றில் உள்ள பொருட்கள் குறித்த படிப்பு.
Xebec - a type of sailing vessel or ship. மூன்று பாய்மரங்கள் உடைய கப்பல்
ஆரோக்ய வாழ்வு
பனங்கற்கண்டு உடல் உஷ்ணம், நீர் சுருக்கு, காய்ச்சலினால் ஏற்படும் வெப்பம் ஆகியவற்றை போக்குகிறது.
Some important abbreviations for students
BTW - by the way
FB - Facebook
நீதிக்கதை
உருவத்தை பார்த்து பழகாதே
ஒரு குளத்தில் பல வகையான வண்ண மீன்கள் வாழ்ந்து வந்தன. மீன் குஞ்சுகள் எப்பொழுதும் கரையோரம் கூடி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அதில் சோமு சிண்டு என்ற மீன்கள் ஒரு நாள் விளையாடி கொண்டிருக்கும்போது ஏய் சிண்டு... என்னைப்பிடி பார்க்கலாம் என்றான். என்கிட்டேயே சவால் விடறியா இப்ப பாரு, ஒரு நொடியில் பிடிக்கறேன் என்று சொல்லி விளையாடி கொண்டிருந்தது.
அப்போது கரையில் ஒரு காகம் புழுக்களைக் கொத்திக் கொண்டிருப்பதை பார்த்து ஏய் சோமு, அங்கே பார் அவன் எவ்வளவு கருப்பாக இருக்கிறான். அவன் குரலை நீ கேட்டிருக்கிறாயா? அருவருப்பாக இருக்கும். அவனை பார்த்தால் பயமாக இருக்கிறது வா போய்டலாம் என்று சிண்டு சொன்னதும், எல்லா மீன்களும் குளத்துக்குள் வேகமாகச் சென்றன. அவசர அவசரமாக மீன்கள் உள்ளே சென்றபோது, பசங்களா? ஏன் இப்படி ஓடி வர்றீங்க? என ஒரு பெரிய மீன் கேட்டது கரையில் காகம் இருக்கு. அதனோட நிறமும் குரலும் பயமா இருக்கு? அதான்...
ஓ....! காகமா, காகத்தினால் நமக்கு எந்த ஆபத்தும் இல்லை. உருவத்தை மட்டுமே வைத்து ஒருவரைப் பற்றி தப்பாக நினைக்கக் கூடாது என்று, அந்த பெரிய மீன் சொல்ல, மற்ற மீன்குஞ்சுகள் இந்த தாத்தாவுக்கு வேற வேலை இல்லை. எப்பவும் உபதேசம் தான். வாங்க போகலாம். என கூறி சென்றது. அடுத்த நாள் வந்தது. குளத்தின் கரையில் கொக்கு ஒன்று அமர்ந்து இருந்தது. அதை பார்த்த மீன் குஞ்சுகள், ஏய் அங்கே பாரு வெள்ளையா... அட! என்ன பறவை அது? வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கு! அலகும் நீளமா இருக்கு. அடடே! அதனோட நடையைப் பாரேன். மீன் குஞ்சுகள் பேசும் சத்தம் கேட்டு குளத்தை நெருங்கியது கொக்கு.
உடனே மீன் குஞ்சுகள், அண்ணே! நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க. உங்க அலகைத் தொட்டுப் பார்க்கலாமா? கொக்குக்கு ஒரே கொண்டாட்டம். ஓ! தொட்டுப் பாரேன். ஒரு மீன் குஞ்சு கொக்கை நெருங்க, கொக்கு மீனை கவ்வியது. நல்லா மாட்டிக்கிட்டியா? என்றது. மாட்டிய மீன் ஆ! என்னை விட்டு விடு! என்று கெஞ்சியது. இதை பார்த்த மற்ற மீன் குஞ்சுகள் ஆபத்து... ஓடுங்க! ஓடுங்க! என்று குளத்திற்குள் சென்றன. அந்த கொக்கு கவ்விய மீனுடன் வானத்தில் சென்று மறைந்தது.
மற்ற மீன் குஞ்சுகள், அந்த தாத்தா மீன் சொன்னது சரியாப் போச்சு. அழகை மட்டும் பார்த்து ஒருத்தரோட பழகக்கூடாது. ஆமாம்! ஆமாம்! என்று உறுதியெடுத்து கொண்டன. அன்று முதல் மற்ற மீன் குஞ்சுகள் கவனமாக இருந்தன. சந்தோஷமாக வாழ்ந்தன.
இன்றைய செய்திகள்
05.11.19
*அந்தமான் அருகே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
*டெல்லி காற்றுமாசு விவகாரம்: பஞ்சாப், ஹரியானா, உ.பி. மாநில தலைமை செயலாளர்களுக்கு உச்சநீதிமன்றம் சம்மன்.
*பொள்ளாச்சி ஆழியாறு அணையில் இருந்து நீர் திறப்பு.
*டில்லியை தொடர்ந்து பஞ்சாப்பில் உச்சகட்டத்தை எட்டி உள்ள காற்று மாசுபாடு காரணமாக பஞ்சாப் கண்காணிப்பு மைய செயற்கோள்கைகள் திணறி வருகின்றன.
*16 அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி: உலக கோப்பை அட்டவணை வெளியீடு...2020 நவ. 15ல் மெல்போர்னில் இறுதிப்போட்டி.
Today's Headlines
🌸A new meteorological low-lying area near Andaman has been developed, said the Chennai Meteorological Department.
🌸Delhi Airpollution issue: Supreme Court sent summons to Punjab, Haryana and UP
🌸Pollachi: Water released from Azhiyar dam.
🌸 Due to air pollution which has reached its peak in Punjab following Delhi the satellites which monitoring the Punjab are being groped.
🌸 World cup T20 match schedule between 16 teams was released,on 2020 Nov 15th finals will be played at Melbourne.
Prepared by
Covai women ICT_போதிமரம.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...