ஒரு
மனிதனுக்கு 7 மணி நேரத் தூக்கம் அவசியம். அதற்கு குறைவாக தூங்குவதும் அதிக
நேரம் தூங்குவதும் உடலுக்கு கேடு விளைவிக்கும். தூங்கும் போது மூளை
அன்றன்று தன்னிடம் சேர்ந்த கழிவுகளை வெளியேற்றும். இதனால்தான் காலையில்
தினமும் புத்துணர்வுடன் கண் விழிக்கிறோம். மேலும் காலையில் புதிதாக
ஆக்சிஜன் கிடைக்கும் போது, ரத்த ஓட்டம் அதிகரித்து எல்லா உறுப்புகளும்
தத்தம் வேலைகளை ஆரம்பிக்கின்றன. சரியாக தூங்காதவர்களை கண்களைப் பார்த்தே
கண்டுபிடித்து விடலாம். சரியாக தூங்காதவர்கள் அன்றைய தினம் தூக்க
கலக்கத்தில் இருப்பதுடன் மனதளவில் பாதிக்கப்பட்டு காணப்படுவர். மேலும்
அறிவாற்றலை பாதிப்பதுடன், முடிவெடுக்கும் திறன், திட்டமிடும் ஆற்றல்,
கவனம், நினைவாற்றல் தூக்கம் இல்லாததால் பாதிக்கப்படுகிறது.
உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், இதயக்கோளாறுகள் போன்ற பல்வேறு நோய்களுக்கு தூக்கமின்மை முக்கிய காரணமாக அமைகின்றது. முக்கியமாக போதிய தூக்கமின்மை காரணமாக உடலுக்கு தேவையான சுரப்பிகளும் சரியாக சுரப்பதில்லை. ஒரு நாளில் 5 மணி நேரத்திற்கு குறைவாக தூங்குபவர்களுக்கு இதய நோய் வரும் அபாயம் மூன்று மடங்கு வரை அதிகரிப்பதாக மருத்துவ ஆய்வில் கூறப்படுகிறது.
தூக்கத்தை பாதிக்கும் காரணிகள்
1. மொபைல் போன்- தூங்குவதற்கு முன் செல்போன் பயன்படுத்துவது தூக்கத்தை பாதிக்கும்.
2.தொலைக்காட்சி பார்த்தல்-எல்.இ.டி டிவிகள் பார்ப்பது தூக்கத்தை பாதிக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.
3.கணினி பயன்படுத்துதல்-மடிக் கணினி மற்றும் கணினி திரைகளை பார்ப்பது உங்கள் தூக்கத்தை நிச்சயம் கெடுக்கும்.
நன்றாக தூக்கம் வர செய்ய வேண்டியவை
தூங்கும் அறையை இருட்டாக வைத்துக் கொள்ளவும். ஏனெனில் வெளிச்சம் இருந்தால் மெலடோனின் எனும் சுரப்புப் பொருள் அதிகரித்து விடும்.இது மூளையை அதிக சுறுசுறுப்பாகி விடும் எனவே தூக்கம் தடைபட்டு விடும்.
வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு உடனே தூங்க கூடாது. அது உங்கள் தூக்கத்தை கெடுத்துவிடும்.அதேபோல் சோம்பலை அகற்றும் காபி, டீ போன்றவற்றை குடித்துவிட்டு படுத்தால், அது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக்கி நிச்சயம் தூக்கத்தை கெடுத்துவிடும்.அடிக்கடி அதிகமாக காபி டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் ஆழ்ந்த உறக்கம் கொள்ள முடியாது. இதனால் காலையில் சுறுசுறுப்புடன் எழுந்திருக்க முடியாது.
இரவில் எளிதில் செரிக்காத தயிர், முட்டை, அசைவ உணவுகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், மஞ்சூரியன், காரமான உணவுகள் போன்றவற்றை சாப்பிட்டு தூங்குவதை தவிர்க்க வேண்டும்.இவற்றை சாப்பிட்டு படுபவர்களுக்கு தூக்கம் கெடுவதுடன் இருதய நோய்கள் வரும் அபாயம் அதிக அளவு இருக்கிறது.
தூங்குவதற்கு முன் அதிக அளவு தண்ணீர் குடித்து விட்டு தூங்குவது தவிர்க்கவும்.இவ்வாறு செய்வதனால் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படுவதை தவிர்த்து ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்.முக்கியமாக சர்க்கரை நோயாளிகள் மாலையிலிருந்து அதிகமாக தண்ணீர் குடிப்பதை குறைத்துக் கொள்ளவும்.
மனதுக்கு பிடித்த புத்தகத்தைப் படிப்பது, மெல்லிய இசை கேட்பது, நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.படுக்கைக்கு செல்லும்போது தளர்வான ஆடைகளை அணிவது நல்லது. இறுக்கமான உடைகள் அணிய வேண்டாம்.
தலையணை அதிக உயரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தூங்குவதற்கு முன் வெதுவெதுப்பான நீரில் குளிப்பது ஆழ்ந்த தூக்கத்தை தரும். தூங்கும் முன் அரை மணி நேரம் நடைபயிற்சி செய்வது நல்ல தூக்கத்தை வரவழைக்கும்.

0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...