தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை வியாழக்கிழமை தொடங்கும் என வானிலை மைய அதிகாரிகள் கூறிவந்த நிலையில், ஆனால் அதற்கு ஒரு நாள் முன்பாகவே அதாவது புதன்கிழமையே வடகிழக்குப் பருவ மழை தொடங்கியது.
இதையடுத்து தென்னிந்திய மாநிலங்களுக்கு மழை எச்சரிக்கையும்
இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. அதில், தமிழகம் மற்றும் கேரள
மாநிலத்துக்கும் ஆரஞ்சு நிற எச்சரிக்கை அதாவது மாவட்ட நிர்வாகம் தயாராக
இருக்குமாறு இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
நேற்று இரவு முதலே சென்னை உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மிதமான மற்றும் கனமழை பெய்து வருகிறது,
இந்தநிலையில், மழை பொய்யும் அளவை அறிய தமிழகம் முழுவதும்
பல்வேறு தொழில்நுட்பங்களுடன் கூடிய மழைப் பதிவு மையங்கள் இயங்கி
வருகின்றது. இவற்றில் பதிவாகும் மழையின் அளவைப் வைத்துத்தான், மாவட்ட
நிர்வாகங்களுக்கு மழை தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுக்கு
எச்சரிக்கை விடுக்கப்படும்.
ஆனால், தமிழகத்தில் சுமார் 51 வானிலை ஆய்வு மையங்களில் உள்ளது
அதில் மழை நீர் பதிவு செய்யும் கருவிகள், போதுமான பராமரிப்பில்லாமல்,
சரியாக இயங்காமல் இருந்து வருவதாக தெரிகிறது.
வடகிழக்குப் பருவ மழைக்கு எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கையாக
கவனமுடன் வானிலையை கண்காணித்து வருவதாக சென்னை வானிலை ஆய்வு மையம்
கூறியுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...