தமிழகத்தில் தற்போது அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டம்
மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு,
பிளஸ் 2 அனைத்து பிரிவுகளுக்கும், புதிய பாடத்திட்ட அடிப்படையில்,
கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.கிட்டத்தட்ட, 12 ஆண்டுகள் பழமையான
பாடத்திட்டம் மாற்றப்பட்டதில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது பாடத்திட்ட
குழு.
ஆனால், அதிக பாடங்கள், கல்லுாரி கல்விக்கு இணையான அளவில், அறிவியல் பாடங்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள், திகட்ட திகட்ட அறிவு பெட்டமாக இடம்பெறும் தகவல்களால், மாணவர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர்கள் திணறல்
குறிப்பாக, முக்கிய பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்கள், பெரிதும் சிரமப்படுகின்றனர். ஒதுக்கப்பட்ட பாடவேளைகளில், வகுப்பு நடத்தினால், சிலபஸ் முடிக்க முடியாத நிலை ஏற்படுவதால், மாலை நேர வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் என அழுத்தம் கொடுக்கப்படுகிறது.கருத்துகளை உள்வாங்க, குறிப்பிட்ட இடைவேளை கூட அளிக்காமல், வகுப்புகள் தொடர்வதால், மாணவர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது.
காலாண்டு தேர்வு முடிந்த நிலையில், பல பள்ளிகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்துள்ளதாக, புலம்பல் எழுந்துள்ளது.பந்தய குதிரையா?அரசு, அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு, பாடத்திட்டம் கையாள, போதுமான பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, இதுபோன்ற பயிற்சிகள் ஏதும் வழங்கப்படவில்லை. நுாறு சதவீத தேர்ச்சியை இலக்குக்காக, அதிக அழுத்தம் கொண்ட பாடத்திட்டத்தை சுமந்து கொண்டு, பந்தய குதிரை போல ஓட வேண்டியிருப்பதாக, புலம்பல் எழுந்துள்ளது.ஆகவே, அனைத்து ஆசிரியர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்க, பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும்.
பாடத்திட்ட அழுத்தத்தை விட, தேர்வு சார்ந்த அழுத்தம், மாணவர்களை வெகுவாக பாதிப்படைய செய்துள்ளது. நுாறு மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தாலும், பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து யூனிட்டுகளும், படிக்க வேண்டுமென்ற கட்டாயம் உள்ளது. பாடத்தை புரிந்து கொண்டு, கருத்துகளை உள்வாங்க போதிய நேரமில்லாத நிலை உள்ளது. புதிய பாடத்திட்டத்தை உள்வாங்கி கொள்ள, அனைத்து ஆசிரியர்களுக்கும் போதுமான பயிற்சி, அவ்வப்போது வழங்கப்பட வேண்டும்.
- சதீஷ்குமார், ஒருங்கிணைப்பாளர், கல்வியாளர் சங்கமம்.
The school stutens evening class vantam free ya play pana vitunka theare are very sad and tairte.. Sunday class also.
ReplyDelete.