அரசுப்பள்ளி
ஆசிரியர்களின் வகுப்பறை செய்லபாடுகளை ஆண்ட்ராய்ட் செயலி மூலம் கல்வி
அலுவலர்கள் கண்காணிக்கும் முறையை தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிமுகம்
செய்துள்ளது.
இது
குறித்து தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில், அரசு மற்றும்
அரசு உதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள் வகுப்பு அறையில் எப்படி பாடம்
நடத்துகிறார்கள் என்பதை ஆண்ட்ராய்டு செயலி மூலமாக கண்காணிக்க முடிவு
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
மாணவர்களுக்கு பாடம் கற்பித்தல், மாணவர்களின் கற்கும் திறனை
அதிகப்படுத்துதல், மாணவர்களின் கேள்வி மற்றும் சந்தேகங்களுக்கு
விடையளித்தல், வகுப்பறை மேலாண்மை, மாணவர் பதிவேடு பராமரித்தல், செயல்வழிக்
கற்பித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆசிரியர்களின் செயல்பாட்டை செயலி
மூலம் கல்வி அலுவலர்கள் மதிப்பீடு செய்து இயக்குநரகத்துக்கு உடனடியாக
தெரியப்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும்
அரசு பள்ளிகளை ஆய்வு செய்ய வரும் கல்வி அலுவலர்கள், பதிவேட்டுக்கு பதிலாக
செயலி மூலம் மாணவர்களின் கருத்துகளை கேட்டு ஆசிரியர்களின் செயல்பாட்டை
மதிப்பீடு செய்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்கட்டமாக
சோதனை முறையில் சென்னை, திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டங்களில் அறிமுகம்
செய்யப்பட்டுள்ள இந்த முறை விரைவில் தமிழகம் முழுவதும் அனைத்து
பள்ளிகளிலும் அமலுக்கு வர உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
Thethi 5 achu innum bc head teachersku sambalam varala ...athuku ethavathu app inruntha sollunga anne
ReplyDelete