''சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், விளையாட்டு ஒரு
பாடமாக்கப்படும்,'' என, மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத்துறை
அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசினார்.
சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட விளையாட்டுத்துறை
அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது: விளையாட்டு நாட்டின் ஒற்றுமையை உறுதி
செய்கிறது. படிக்காமல் விளையாடிக் கொண்டிருந்தால், வாழ்வில் முன்னேற
முடியாது என, கூறுவர். அதை மாற்ற வேண்டும். விளையாட்டிற்கும்
முக்கியத்துவம் கொடுக்கும் வகையில், சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில்,
விளையாட்டு ஒரு பாடமாக்கப்படும்.
ஒலிம்பிக் உள்ளிட்ட விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு
மட்டுமின்றி, பங்கு பெற்றவர்களுக்கும், வேலை வாய்ப்புகள் வழங்க, நடவடிக்கை
எடுக்கப்பட்டு உள்ளது. நாட்டிற்காக விளையாடியவர்கள், கவுரவிக்கப்பட
வேண்டும். இந்தியாவிற்காக விளயைாடி, தற்போது, பொருளாதார நெருக்கடியில் உள்ள
விளையாட்டு வீரர்கள் என்னை அணுகலாம்; தேவையான உதவிகள் செய்யப்படும்.
வரும், 2020 நடக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு, சில மாதங்கள் தான் உள்ளன. 2024
ஒலிம்பிக்கில் இரட்டை இலக்க பதக்கம் பெற முயற்சிப்போம்; 2028 பதக்கம்
பெற்ற நாடுகளின் பட்டியலில், முதல், 10 இடங்களை பிடிக்க, இந்தியா முயற்சி
மேற்கொள்ளும்.
தமிழகம் விளையாட்டு கலாசாரம் கொண்ட மாநிலமாக திகழ்ந்து வருகிறது.
எதிர்காலத்தில், விளையாட்டு துறையில், தமிழகத்தில் இருந்து, திறமையான
வீரர்கள் வருவார்கள் என, நம்புகிறேன்.இவ்வாறு, அவர் பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...