கரூர் அருகேயுள்ள பெரிய வடுகப்பட்டி ஊராட்சி ஒன்றியத்
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கண்ணன்(46). இவர், கடந்த 1997-ம் ஆண்டு ஆசிரியர்
பணியில் சேர்ந்தார். மிகவும் பிற் படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கண்ணன்
பட்டியல் இனத்தவர் என போலி சாதிச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்ததாக
புகார் எழுந்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சி யர் த.அன்பழகன் நடத்திய விசா ரணையில், ஆசிரியர் கண்ணன் போலி சாதிச் சான்றிதழ் அளித்து பணியில் சேர்ந்தது தெரியவந் தது. இதையடுத்து ஆசிரியர் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்க கரூர் மாவட்டக்கல்வி அலுவலருக்கு மாவட்ட ஆட்சியர் அன்பழகன் உத்தரவிட்டார். இதையடுத்து, கரூர் மாவட்ட கல்வி அலுவலர்சிவராமன், ஆசிரியர் கண்ணனை பணியிடை நீக்கம் செய்து நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.
மோசடி செய்த ஆசிரியர் 22 ஆண்டுகள் வேலை செய்து சம்பாதித்து செட்டில ஆகிட்டார், அந்த வேலைக்கு உண்மையாக உரிமை உள்ளவர் குடும்பமும் அவரது வாரிசுகளும்...ஒரு அடிப்படை வசதிகளை கூட அடைய முடியாமல் ஜென்மம் கடக்க நேர்ந்திருக்குமே... அட கொடுமை... காலங்காலமாக அடிமை பட்டவர்களுக்கு தந்த சிறிய சலுகை யிநையும் தட்டி பறிக்கும் கூட்டமே நீங்கள் மனிதர்களா??? இதற்கு கோவிலில் உட்கார்ந்து பிச்சை எடுக்கலாம்...
ReplyDelete