கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த மார்த்தாண்டம் அருகே உள்ளஆலஞ்சோலை என்ற பகுதியில் பணிபுரிந்து கொண்டிருந்தஅரசு பள்ளி ஆசிரியை ஒருவரை அதே பள்ளியில் படித்து வரும் 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் கத்தியால் குத்தியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் ஆலஞ்சோலை அரசு பள்ளி ஆசிரியை மெர்லின் சைனி என்பவர் இன்று மாலை பள்ளி முடிந்தவுடன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது அந்த பள்ளியில் படித்த 11ஆம் வகுப்பு மாணவர் ஒருவர் திடீரென ஆசிரியையை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிவிட்டார்.
மாணவன் கத்தியால் குத்தியால் படுகாயமடைந்த ஆசிரியை மெர்லின் சைனி நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் விரைவில் அவர் குணமடைவார் என்றும் கூறப்படுகிறது
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பியோடிய மாணவனை பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.,
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...