காலாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில், ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரைக்கான, காலாண்டு தேர்வுகள், செப்., 23ல் முடிவடைந்தன.பின், ஒன்பது நாட்கள் விடுமுறை விடப்பட்டு, அக்., 3ல், பள்ளிகள் திறக்கப்பட்டன. மீண்டும், அக்., 5 முதல், ஆயுத பூஜை விடுமுறை விடப்பட்டது.இந்நிலையில், நாளை மீண்டும் பள்ளிகள் திறந்ததும், ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களின், காலாண்டு தேர்வு மதிப்பெண்களை ஆய்வு செய்ய வேண்டும் என, ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
பின்தங்கிய மாணவர்களுக்கு, எந்த பாடத்தில் மதிப்பெண் குறைந்ததோ, அந்த பாடத்தில், காலை, மாலை நேர சிறப்பு பயிற்சி அளிக்க வேண்டும். அவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு, ஆசிரியர்கள் கூடுதல் நேரம் பணியாற்றி, மாணவர்களின் தேர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றும், பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...