Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மருத்துவ குணங்கள் - கீழாநெல்லி


கீழாநெல்லி
தாவர இயல் பெயர்: Phyllanthus niruri

இதன் மறு பெயர்கள்: இளஞ்சியம், அவகதவாய், கீழ்வாய் நெல்லி, கீழ்க்காய், காதமாதாநிதி, மாலறுது, மாலினி, வித்துவேசரம், பூதாத்திரி, பெருவிரியகா, காமாலை நிவர்த்தி

வளரும் இடங்கள்: இந்தக் கீழாநெல்லி இந்தியாவைச் சார்ந்த தாவரம் ஆகும். அரை மீட்டருக்கும் குறைவாகத் தான் இந்தச் செடி வளரும். அது மட்டும் அல்ல ஈரத்தன்மை உள்ள மண் தான் இதன் பிறப்பிடம்.

பயன் தரும் பகுதிகள்: முழுத்தாவரமும் அதாவது இலைகள், தண்டுத் தொகுதி மற்றும் வேர்கள் உட்பட அனைத்துமே பயன் தரும் பகுதிகள் தான்.

பொதுவான தகவல்கள் : கீழாநெல்லி (Phyllanthus niruri) ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். இது ஏறத்தாழ அரை மீட்டர் வளரும் ஓராண்டுத் தாவரமாகும். செடி முழுதும் மருத்துவப் பயன்பாடுடையதாகும்.

இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது ஆகும். இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் தன்மை உடையது. இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய் நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழாநெல்லி, கீழ்வாய் நெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.

தொன்றுதொட்டே தமிழர் மருத்துவத்தில், மஞ்சள் காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர் என்பதனை இன்றும் கிராமத்து மக்களின் வாய்ச் சொல்லிலும், பயன்படுத்துதலிலுமிருந்து தெரிந்துகொள்ள முடிகிறது.

இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுக் கூடங்களில் இம்மூலிகை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இது மிக்க குளுமைத் தன்மை கொண்டதாகும். சுவைகளில் இனிப்பு, புளிப்பு, கசப்பு, கார்ப்புச் சுவைகளைக் கொண்டது. விந்துவை அதிகமாக வளர்க்கும். கபத்தை தணித்து வாதத்தை அதிகரிக்கும். இதனை பச்சையாகக் கூட பறித்துத் தின்னலாம். ஆனால் லேசான கசப்பு இருக்கும்.

கீழாநெல்லியின் இதர மருத்துவப் பயன்கள்:

* வழுக்கையில் முடி வளர கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால் வழுக்கை மறையும்.

* கீழாநெல்லி இலையுடன் உப்பு சேர்த்து அரைத்து சொறி, சிரங்கு, அரிப்பு உள்ள இடங்களில் தடவினால் சீக்கிரத்தில் குணம் கிடைக்கும்.

* நல்லெண்ணைய் இரண்டு ஆழாக்கு கீழாநெல்லிவேர், கருஞ்சீரகம், நற்சீரகம் இவை வகைக்குகால் பலம் (9 கிராம்) பசும்பால் விட்டு அரைத்துகலக்கிக் காச்சி வடித்து தலை முழுகி வரலாம் இது கீழாநெல்லி தைலமாகும். இதனால் உச்சி குளிர்ந்து டென்ஷன் குறையும். அது மட்டும் அல்ல முடி நன்றாக வளரும்.

* மஞ்சள் காமாலை, மூத்திர நோய்கள், குடல்புண், தொண்டை நோய்கள், வயிற்றுவலி, வயிற் றோட்டம், முறைசுரம், அதிக உஷ்ணம், கண்நோய்கள், மாதவிடாய்க் கோளாறுகள், பசியின்மை, தோல் நோய்கள், தீராத அழுகல் புண்கள், புரைகள், வீக்கம், குருதிவடிதல் போன்ற நோய்களுக்கான மூலிகை மருத்துவத்தில் கீழாநெல்லி பயன்படுகின்றது.

* கீழாநெல்லியை அரைத்து பசும்பாலுடன் கலந்து காலை, மாலை ஆகிய இருவேளை தொடர்ந்து 3 நாட்கள் உட்கொண்டு வந்தால் உடல் சூடு தணிந்து குளிர்ச்சி பெறும்.

* நீர் சுருக்கு நோயினால் அவதிப்படுபவர்கள் கீழா நெல்லி இலையுடன் சீனாக் கற்கண்டு சேர்த்து மைப் போல அரைத்து இருவேளைகள் என 1 வாரம் சாப்பிட்டால் உடனே சரியாகி விடும்.

* கீழாநெல்லி இலை, மூக்கிரட்டை இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து கழற்சிக் காயளவு மோரில் கலக்கி 45 நாள்கள் கொள்ள மாலைக்கண், பார்வை மங்கல், வெள்ளெழுத்து தீரும்.

* பல் கூச்சம் இருந்தால் கீழா நெல்லியின் வேரை வாயில் போட்டு இரண்டு நிமிட நேரம் மென்றால் போதும். உடனே பல் கூச்சம் போய்விடும்.

* சிறிது சீரகத்துடன் கீழாநெல்லி வைத்து அரைத்து, எலுமிச்சை சாறில் சேர்த்துப் பருகி வர கல்லீரல் கோளாறு குணமாகும்.

* கீழாநெல்லி வேர், அசோகப்பட்டை, அத்திப்பட்டை ஆகியவற்றை இடித்து தூள் செய்து சம அளவு கலந்து வேளைக்கு 10 கிராம் வீதம் காலை மாலை வெந்நீருடன் 40 நாள் கொள்ள பெரும்பாடு, வெள்ளை, மாதவிடாய் தாமதம் உதிரச்சிக்கல் தீரும்.

* கீழாநெல்லி இலையுடன் மாதுளம், நாவல் கொழுந்து இலைகளை சம அளவாக எடுத்து அரைத்து நெல்லிக்காய் அளவு வெறும் வயிற்றில் 1 டம்ளர் மோரில் கலக்கிக் குடித்து வர சீதபேதியை நிறுத்தும்.

* வாலிப வயோதிகம் நீங்க வேண்டுமானால் ஓரிதழ் தாமரையுடன் சம அளவாக கீழாநெல்லி இலையைச் சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவு அதிகாலையில் 45 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

* மஞ்சள் காமாலை, உடலில் உண்டாகும் வெப்பம், உடலில் ஊறிய மேகம், தாதுவெப்பம், நீரிழிவு இவற்றை போக்க உதவுவது கீழாநெல்லிப் பொடி.

* விஷக்கிருமிகளால் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்தாகவும் கீழாநெல்லி பயன்படுகிறது.

* கீழாநெல்லி பொடி, நெல்லிக்காய் பொடி, கரிசலாங்கண்ணி பொடி ஆகிய மூன்றையும் சமஅளவு எடுத்து. தேனில் குழைத்து உண்டு வந்தால்… அடிக்கடி வரும் சளித்தொல்லை குறையும், ரத்த சோகை மாறும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

* கீழாநெல்லி இலையுடன் சிறிது மஞ்சளைச் சேர்த்து அரைத்து உடலில் தேய்த்து, பதினைந்து நிமிடங்கள் ஊறவிட்டு, குளித்தால் தோல் நோய்கள் குணமாகும்.

* கீழாநெல்லிச் செடியை நன்றாக அரைத்து சொறி, சிரங்கு, படைகளில் பற்றுப்போட்டால் உடனே குணமாகும். கீழாநெல்லிச் செடியை நன்றாக மென்று பல்துலக்கி வந்தால் பல்வலி குணமாகும். மேலும் செடியை நன்றாக மென்று ஈறுகளில் சாறு நன்றாகப் படிய வைத்திருந்தால். ஈறு நோய்கள் குணமாகும்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive