உலக கைகழுவும் தினத்தை முன்னிட்டு கைகழுவுதல் பற்றி திருச்சி எலைட் சிறப்பு பள்ளி மாணவ மாணவிகளுக்கு செயல்விளக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பின்படி, 2008-ம் ஆண்டிலிருந்து கை கழுவும் தினம் ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 15-ம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. உலக கை கழுவும் தினத்தை முன்னிட்டு எலைட் சிறப்புப் பள்ளியில் உலக கை கழுவும் தினம் கடைபிடிக்கப்பட்டது.
பள்ளித் தாளாளர் முத்துலட்சுமி தலைமை வகித்தார்.கைகழுவுதல் குறித்து இயற்கை நலவாழ்வியல் மற்றும் யோகா பயிற்றுநர் விஜயகுமார், ‘’கையினை முறையாக கழுவாததால் பல நோய் தொற்று ஏற்படுகிறது. சாப்பிடுவதற்கு முன்னும், பின்னும், விளையாடிய பிறகும், கழிப்பறை சென்று வந்த பிறகும், வாகனம் ஓட்டி வந்த பிறகும் கைகளை முறையாகக் கழுவ வேண்டும். அதோடு செல்போன், கணினி பயன்படுத்திய பிறகும் ,வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் விளையாடிய பிறகும் கண்டிப்பாக கைகழுவ வேண்டும்.
கை கழுவுதல் என்பது தண்ணீரில் கை கழுவுவது அல்ல. சோப்பு போட்டு கைகழுவுவதுதான் முறையான கைகழுவுதல் ஆகும். இதன் மூலம் நமக்கு வரும் நோய்களை 80% வராமல் தடுக்க முடியும்.
என விளக்கினார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...