நாடு முழுவதும் செப்டம்பர் வரை 5.87 கோடி பேர் 2018 - 19ம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
கடந்த 2018 - 19ம் நிதியாண்டுக்கு அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல்
செய்வதற்கான அவகாசம் ஆகஸ்ட் 31ம் தேதியுடன் நிறைவடைந்தது. தற்போது
அபராதத்தடன் கணக்கு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு 2.5 லட்சம்
ரூபாய் வருமான உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல்
செய்வது அவசியம். வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருமான வரி
உச்சவரம்புக்கு கீழ் வந்தாலும் கணக்கு தாக்கல் செய்வது அவசியம்.
இந்நிலையில் செப்டம்பர் வரை கணக்கு தாக்கல் செய்தோரின் விபரங்களை வருமான
வரித்துறை வெளியிட்டுள்ளது. அதன் விபரம்: நாடு முழுவதும் 5.87 கோடி பேர்
வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இது 2017 - 18ம் நிதியாண்டில்
5.67 கோடியாக இருந்தது. முந்தைய நிதியாண்டை விட 20 லட்சம் பேர் அதிகமாக
கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் தற்போது வரை 37.50 லட்சம் பேர்
கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.
இது 2017 - 18ல் 38.27 லட்சமாக இருந்தது. முந்தைய நிதியாண்டை விட 77 ஆயிரம்
பேர் குறைவாக தாக்கல் செய்துள்ளனர். ஆனால் மகாராஷ்டிரா, குஜராத், உத்தர
பிரேதசம் போன்ற மாநிலங்களில் 2017 - 18ம் நிதியாண்டை விட பல லட்சம் பேர்
அதிகமாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்தில் மட்டுமே
கணக்கு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...