தமிழகத்தில் கூட்டுக்குடும்பங்கள் சிதைந்து, புறாக்கூண்டுகளைப் போன்ற அபார்ட்மெண்ட்களில் தனிக்குடித்தனங்கள் தலையெடுக்கத் துவங்கிய பிறகு குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள். பெரும்பாலான பெற்றோர்கள், அவர்களது தாயாரிடம் இருந்தோ, மாமியாரிடம் இருந்தோ, 'நாங்க என்னமோ புள்ள வளர்க்காத மாதிரி' என்கிற வார்த்தைகளைக் கேட்டிருப்பவர்களாகவே இருப்பார்கள். அதுமாதிரியான வார்த்தைகளைக் கேட்கும் போது, 'அந்த காலத்து மனுஷங்க... சுத்தம் இல்லாம இப்படி தான் எதையாவது செய்வாங்க!' என்று நமக்கு நாமே திட்டமாய் முணுமுணுத்துச் செல்வோம். அப்படி குழந்தை வளர்ப்பில் இன்றைய பெற்றோர் செய்யும் மிகப் பெரியத் தவறு குழந்தைகளுக்கு எப்போதும் டயபர் மாட்டி விடுவது.
ஏதோ மளிகைப் பொருட்களை வாங்குவது போல மாத துவக்கத்திலேயே டயபர்
பாக்கெட்டுக்களை வாங்கி வீட்டில் அடுக்கி வைத்துக் கொள்கிறார்கள். ஆனால்
இந்த டயபர் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் ஆபத்தை பற்றி இவர்கள் அறிவதில்லை.
அடிக்கடியோ அல்லது எப்போதுமோ குழந்தைகளுக்கு டயபர் மாட்டி விடுவதால்
ஏற்படுத்தும் ஆபத்துகள் என்னென்ன என்று தெரியுமா? குழந்தைகள் அசுத்தம்
செய்தால், துணி துவைக்க சோம்பல் பட்டோ அல்லது இரவுகளில் தூக்கத்தைக்
கெடுத்துக் கொள்ளாமல் இருப்பதற்கோ, வெளியில் ஊர் சுற்றுவதற்கோ என்று
இவர்கள் பட்டியலிடும் காரணங்கள் எல்லாமே நியாயமாக இருந்தாலும், நம்மை
இப்படியெல்லாம் டயபர் மாட்டியா வளர்த்தார்கள். இன்னும் இந்த விஷயத்தில்
ஆழமாக இறங்கிப் பார்த்தால், நிறைய வீடுகளில் அப்பாக்கள், குழந்தைகள்
அசுத்தம் செய்துவிடுவார்களோ எனும் பயத்தால் குழந்தையை தூக்குவதே கிடையாது.
டயபர் மாட்டியிருக்கும் போது குழந்தை சிறுநீர் கழித்தால், ஈரமான டயபரை
நீண்ட நேரம் கவனிக்கா விட்டால், பாக்டீரியா தொற்று, தடிப்புகள் மற்றும்
புண் ஆகியவற்றை ஏற்படுத்தும். இயல்பிலேயே இரண்டு வயதுகள் வரையில்
குழந்தைகளின் சருமம் மிகவும் மென்மையாக இருக்கும். குழந்தையின் மென்மையான
உடலில் டயபரை உபயோகிப்பது அவர்களின் சருமத்தை தடிமணாக்கிவிடுகிறது. டயபரில்
ஈரத்தை உறிஞ்சுவதற்கு என்று இரசாயனங்கள், ஜெல்கள் மற்றும் சில
வேதிப்பொருட்களை கலந்திருப்பார்கள். நிறைய குழந்தைகளுக்கு இதனால் அலர்ஜி
ஏற்படுகிறது.
குழந்தைகளுக்கு பயன்படுத்தும் உபயோகித்து தூக்கி எறிய கூடிய டயபர்கள்,
சோடியம் பாலியாகிரிலேட் பயன்படுத்தி செய்யப்படுகிறது. மேலும் இதில் நச்சு
தன்மை கொண்ட உறிபஞ்சுகள் இருப்பதால், குழந்தைகளுக்கு சில வகையான தொற்று
நோய் ஏற்படுவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைகிறது. டயபரில்
இருக்கும் மூலக்கூறுகள் ஈரப்பதத்தை வெளி விடாமல் தடுக்கும். இதனால், டயபர்
எப்போதுமே வெப்பமாகவும் ஈரப்பதத்துடனும் இருக்கும், அந்த சமயத்தில்
பாக்டீரியா மற்றும் பூஞ்சைகள் போன்றவை எளிதில் பரவி, குழந்தைகளின்
சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
தூக்கி எறிய கூடிய டயபரில் இருந்து அதிக அழுத்தத்தில் ஆவியாக கூடிய
இரசாயனங்களான எத்தில் பென்சீன், சொலின், தைலின் போன்றவை இருப்பதால்
குழந்தைகளுக்கு நரம்பியல் பிரச்சனைகள் மற்றும் கண் எரிச்சல் போன்றவைகளும்
நாளடைவில் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. மேலும், டயபர்களில் பிளாஸ்டிக்,
பேப்பர் மற்றும் பேஸிஸ் போன்றவை இருப்பதால் எளிதில் மாக்குவதில்லை.
இவற்றைத் தொடர்ந்து உபயோகிப்பதால் குழந்தைகளின் கண், மூக்கு மற்றும்
தொடையில் வலி ஏற்படுவதோடு, குழந்தைகளுக்கு ஆஸ்துமா ஏற்படும் அபாயமும்
உள்ளது. இவற்றை தவிர்க்க குழந்தைகளுக்கு துணிகளை பயன்படுத்துவது சிறந்தது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...