வெள்ளம் போன்ற ஆபத்து காலத்தில் தப்பிக்கும் வகையில்,
நீச்சல் பயிற்சியை, பள்ளிக் கல்வியில் கட்டாயமாக்க வேண்டும்' என,
இந்தியாவைச் சேர்ந்த நிபுணர்கள் கூறியுள்ளனர்.
தென் ஆப்ரிக்காவின் டர்பன் நகரில், உலகம் நீரில் மூழ்குவதை தடுக்கும் மாநாடு சமீபத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட்ட விபரங்கள் தொடர்பாக, இத் துறை நிபுணர்கள் கூறியதாவது:80 பேர்உலக சுகாதார அமைப்பின் புள்ளி விபரங்களின்படி ஆண்டுக்கு, 3.6 லட்சம் பேர், நீரில் மூழ்கி இறக்கின்றனர். தேசிய குற்ற ஆவணக் காப்பக கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஒரு நாளைக்கு, 80 பேர் நீரில் மூழ்கி இறக்கின்றனர்.நகர்ப்புறங்களைவிட, ஏரி, குளம் போன்ற நீர்சேமிப்பு பகுதிகள் அதிகம் உள்ள கிராமப் பகுதிகளில் தான், இச்சம்பவங்கள் அதிகம் நடக்கின்றன.குறிப்பாக, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இறப்பது அதிகமாக உள்ளது.
பயிற்சி மழையால் திடீர் வெள்ளம் ஏற்படுவது என்பது, நம் நாட்டில் அதிக அளவில் நடக்கிறது. இது போன்ற நேரங்களில், நீரில் மூழ்குவதை தடுக்கும் வகையில், நீச்சல் பயிற்சி மற்றும் ஆபத்து காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சியை அளிக்க வேண்டும்.ஐரோப்பிய நாடான பிரிட்டனில், 1994ல் இருந்து,பள்ளிகளில் நீச்சல் பயிற்சி அளிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மற்றொரு ஐரோப்பிய நாடான நார்வேயில், இது, 2015ல் கட்டாயமாக்கப்பட்டது.டர்பனில் நடந்த மாநாட்டில், நீச்சல் பயிற்சியை பள்ளிகளில் கட்டாயமாக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
கட்டாயம்சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய கல்வி வாரியம், பள்ளிகளில் விளையாட்டை ஒரு பாடமாக்க வேண்டும் என்பதை கடந்தாண்டு கட்டாயமாக்கியது. இதில், நீச்சலும் உள்ளது. ஆனால், போதியவசதிகள் இல்லாததால், நீச்சலை பெரும்பாலான பள்ளிகள் தேர்ந்தெடுப்பதில்லை.
தற்போது சில தனியார் அமைப்புகள், நீச்சல் குறித்தும், ஆபத்து காலத்தில் எவ்வாறு செயல்பட வேண்டும் என்ற பயிற்சியையும் அளிக்கின்றன. பெற்றோருக்கும் இதில் முக்கியப் பங்கு உள்ளது.நீச்சலை ஒரு விளையாட்டாக மட்டும் பார்க்காமல், ஆபத்து காலத்தில் குழந்தைகளை காப்பாற்றுவதற்கு உதவும் என்பதால், நீச்சலை கற்றுத் தர முன் வரவேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...