தமிழகம்
முழுவதும் 32 மாவட்டங்களிலும் 12-ம் வகுப்பு புதிய பாடத்திட்டத்தின் கீழ்
கணிதம், இயற்பியல், வேதியியல் பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகள்
நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது. 11,145 ஆசிரியர்களுக்கு
2-ம் பருவ பாடத்திட்டம் குறித்த பயிற்சி அக்.,22 முதல் 30 வரை நடைபெறும்.
முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தவறாமல் பயிற்சியில் பங்கேற்க வேண்டும் என
தெரிவித்துள்ளது.
:பிளஸ் 2 புதிய பாடத்திட்டத்தில் 11 ஆயிரம் ஆசிரியர்களுக்கு சிறப்பு
பயிற்சி அளிக்கப்படுகிறது.இதுகுறித்து மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும்
பயிற்சி நிறுவன இயக்குனர் பழனிசாமி வெளியிட்ட செய்திக்குறிப்பு:புதிய
பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பு எடுக்கும் ஆசிரியர்களுக்கு மாநில
கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான எஸ்.சி.இ.ஆர்.டி. சார்பில்
பயிற்சி அளிக்கப்படுகிறது. முதலாம் தொகுதி பாடப் புத்தகத்தின் படி 11
ஆயிரத்து 145 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் பயிற்சி பெற்றனர்.அதேபோல்
இரண்டாம் தொகுதி புத்தகத்தின் படி பயிற்சி துவங்கியுள்ளது. கணிதம்,
இயற்பியல், வேதியியல் பாடங்களில் ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் தலா மூன்று
முதுநிலை ஆசிரியர்கள் என 280 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.இவர்கள் வழியாக
அனைத்து மாவட்ட பள்ளி ஆசிரியர்களுக்கும் வரும் 22 முதல் அக். 31 வரை
பயிற்சி வகுப்பு நடத்தப்படும். இதன் வழியாக 11 ஆயிரத்து 145 ஆசிரியர்களும்
முழு பயிற்சி பெறுவர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...