Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசுக்கு ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை 'தாமதமாகும் ஆசிரியர் கலந்தாய்வு



மாணவர்களின் நலன் கருதி பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர் இடமாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளன.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆசிரியர் சங் கம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர் நலகூட்டமைப்பு உள்பட பல்வேறு சங்கங்கள் இணைந்து வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், கடந்த காலங்களில் ஆசிரியர் இடமாறுதல்மற் றும் பதவி உயர்வுக்கான பொதுக் கலந்தாய்வுமே மாதத்தில் நடத்தப்படும். இடமாற்றம் செய்யப்படும் ஆசிரியர்கள் ஜூன் மாதத்தில் புதிய பள்ளியில் பணியேற்பார்கள்.
இதனால் கற்றல்-கற்பித்தல் பணி, தடையின்றி சிறப்பாக நடைபெற்றது. தற்போது பல்வேறு காரணங்களால் பொதுக் கலந்தாய்வு தடைபட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிப்புக்குள் ளாகியுள்ளது. குறிப்பாக அரசின் தவறான முடிவு மற்றும் மூன்றாண்டுகள் ஒரே இடத் தில் பணி புரிந்திருந்தால் மட்டுமே இடமா றுதல் உள்ளிட்ட காரணங்கள் போன்றவற் றால் பொதுக்கலந்தாய்வு நடைபெறாமல் உள் ளது. இதனால் காலாண்டுத் தேர்வு கூட முடி வடைந்த நிலையில் ஆசிரியர்கள் இல்லாமல், சில பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2வகுப்பு மாணவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
கலந்தாய்வு தொடர்பான அனைத்து வழக் குகளும் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை முடித்து வைக்கப்பட்டு இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி பதவி உயர்வு, பணி நிரவல் பெற் றவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்றாண்டு விதிமுறையை தளர்த்தி 2019-20ஆம் ஆண்டு கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே மாணவர்களின் கல்வி நலன் கருதியும் குடும் பத்துடன் இருந்து மனநிறைவோடு ஆசிரியர் பணியைத் தொடர காத்திருக்கும் பல்லாயி ரக்கணக்கான ஆசிரியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்திடும் வகையிலும் ஆசிரியர் இட மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அந்த அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது.





1 Comments:

  1. I am working as by asst in a ghss,nagai district...6 pg asst teacher post vaccant in my school.13 bt asst are from other dist out of ....14....pavam pasanga.....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive